சென்னை-'மாநிலம் முழுதும், சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
![]()
|
தமிழகத்தில், சட்ட விரோத மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல், கஞ்சா கடத்தலை கண்டு கொள்ளாமல் இருப்பது, போலீசாருக்கு மாமூல் தரக்கூடிய தொழிலாக மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றம்.
'இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
மாநிலம் முழுதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளை நிழல் போல கண்காணிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். இவர்களின் சங்கிலி தொடரை அறுக்க வேண்டும்.
வெளி மாநிலங்களுக்கு சென்று, போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுஉள்ளார்.
இப்பணிகளில் போலீசார் ஓரளவு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுதும், சட்ட விரோத சூதாட்ட கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்ட 'கிளப்' நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னணியில், அரசியல்வாதிகளின் கைத்தடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாருக்கு சில லட்சம் ரூபாய் மாமூலாக வந்துவிடுகிறது. இதனால், சூதாட்ட கிளப்புகளை போலீசார் கண்டுகொள்வது இல்லை.
![]()
|
உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அறிக்கையில், 'சட்ட விரோத சூதாட்ட கிளப்கள் இல்லை' என, போலீசார் தெரிவித்து விடுகின்றனர். இதுபற்றி விசாரிக்க, உளவுத்துறை போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அளிக்கும் தகவலின்படி, சூதாட்ட கிளப்புகளில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.
போலீசார் கூறுகையில்,'டி.ஜி.பி., சைலேந்திரபாபுவின் பார்வை சூதாட்ட கிளப்கள் மீது படிந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்படும் கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும்' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement