வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'அக்மார்க்' தரத்தில் ஆவின் நெய் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக, 100 மி.லி., நெய் பாட்டில் 70 ரூபாய்; 200 மி.லி., 130; 500 மி.லி., 290; ஒரு லிட்டர் 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பெல்லாம் ஆவின் நெய் மிகவும் தரமானதாகவும், மணம் நிறைந்ததாகவும் இருக்கும். தற்போது நெய்யின் நிறம் மஞ்சளாக இருப்பது மட்டுமின்றி, டால்டா போன்ற வெளிர் மஞ்சள் நிறத்திலும் உள்ளது. பாட்டிலில் உள்ள நெய்யின் அடிப்பகுதியில், சிறிய முட்டைகள் போல காணப்படுகின்றன.
![]()
|
இதனால் 'அக்மார்க்' தரத்தில் ஆவின் நெய் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் பண்ணைகளிலும், நெய் தயாரிக்கப்படுகிறது. இங்கு விற்பனை தேவை அதிகரிக்கும்போது, அவற்றில் டால்டா அல்லது எண்ணெய் சேர்க்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
![]()
|
இது, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பல்வேறு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை கிடங்குகளுக்கு வந்துள்ள நெய் பாட்டில்களை, அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், ஆவின் நெய்யில் கலப்படம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.