புதுடில்லி: இந்தியாவின் உதவியால் உலக பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். வருங்காலத்தில், உலகையே இந்தியா வழிநடத்தி செல்லும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

புதுடில்லியில் 41வது இந்திய சர்வதேச வர்த்தக திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டி: பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இதனால், உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் உதவியால் உலக பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். வருங்காலத்தில், உலகையே இந்தியா வழிநடத்தி செல்லும். பிரதமரின் கதி சக்தி யோஜனா திட்டம் ( தேசிய உட்கட்டமைப்புக்கான திட்டம்) இந்தியாவின் உள்கட்டமைப்பில் புரட்சி நிகழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு, மோடி துவக்கி வைத்தார். இது இந்தியாவில் முழுமையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதறகு பெரிதும் உதவும்.

நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும். உலக அரங்கில், தனது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு புதிய அடையாளத்தை வழங்க மோடி அரசு முழு அர்ப்பணிப்புடன், தொழில்துறையுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.