மும்பை: நாட்டை துண்டாடுவது தேசபக்தி அல்ல. நாட்டை ஒற்றுமை படுத்துவதே தேசபக்தி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
கடந்த செப்., 7 ல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுலின் நடைபயணம் 6 மாநிலங்கள் 28 மாவட்டங்களை கடந்து தற்போது மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
கடந்த 7 ல் மஹாராஷ்டிராவிற்குள் நுழைந்த இந்த யாத்திரையானது, அங்கு 5 மாவட்டங்கள் வழியாக 382 கி.மீ., பயணித்து வரும் 20ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்குள் உழைகிறது.

இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பணவீக்கம் தேசபக்தியா?
வேலைவாய்ப்பின்மை தேசபக்தியா?
தவறான ஜிஎஸ்டி தேசபக்தியா?
சீனா விவகாரத்தில் பொய் கூறுவது தேசபக்தியா?

நாட்டை துண்டாடுவது தேசபக்தி அல்ல. நாட்டை ஒற்றுமைபடுத்துவது தான் தேசபக்தி. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.