வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் விரைவில் நடக்க உள்ள லோக்சபா மற்றும் சட்டபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையிலான வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்துஉள்ளது.
உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவர் எம்.பி.,யாக இருந்த மெயின்புரி லோக்சபா தொகுதிக்கு வரும், டிச., 5ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர் சாக்கியா.கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால்,, ஷிவ்பால் துவக்கிய பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின், பா.ஜ.,வில் சேர்ந்தார்.
ராம்புர் தொகுதியில், பா.ஜ., ஆகாஷ் சக்சேனாவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அசம்கான் மற்றும் அவருடைய மகன் அப்துல்லாவுக்கு எதிராக இவர் அளித்த புகார்களின்படியே, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.இதேபோல் கதாவ்லி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., விக்ரம் சைனியின் மனைவி ராஜ்குமாரி சைனியை பா.ஜ., நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் சைனி குடும்பம் மிகவும் வலுவாக உள்ளது.