திருவாரூர் மாவட்ட கோவில் சிலைகள்: அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

Added : நவ 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, இரண்டு பழங்கால உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திருவாரூர் மாவட்டம், ஆலத்துாரில் விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அதே மாவட்டத்தில் உள்ள, வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள்
 திருவாரூர் மாவட்ட கோவில் சிலைகள்: அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

சென்னை: திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, இரண்டு பழங்கால உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திருவாரூர் மாவட்டம், ஆலத்துாரில் விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அதே மாவட்டத்தில் உள்ள, வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

சோழர் காலத்தைச் சேர்ந்த இச்சிலைகளை மர்ம நபர்கள், 50 ஆண்டுகளுக்கு முன் திருடிச் சென்றனர். இதுகுறித்து, 2017ல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து, சிலைகளைத் தேடி வந்தனர். பின், இந்த வழக்கு, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இப்பிரிவு போலீசார், தமிழக கோவில்களில் இருந்து திருடு போன சிலைகள் குறித்த புகார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, விஸ்வநாத சுவாமி கோவிலில் சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலைகளின் படங்கள், புதுச்சேரியில் இருப்பது தெரிய வந்தது.இதன் வாயிலாக, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள், அமெரிக்காவில் உள்ள, அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அங்கு வசிக்கும் தன்னார்வலர் ஒருவர் வாயிலாக, சிலைகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தலைமையிலான போலீசார், விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகளை, தமிழக கோவிலில் இருந்து தான் திருடி கடத்தப்பட்டது என்பதற்கான ஆவணங்களை திரட்டி வருகின்றனர். இதன் வாயிலாக, சிலைகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

சீனி - Bangalore,இந்தியா
16-நவ-202211:46:32 IST Report Abuse
சீனி அந்த சாந்த மூர்த்தியான விஷ்ணு படத்தையே காலை முதல் 10முறை பார்த்து ரசித்தாலும், மனசு ஆறவில்லை. அந்த சிலையை இழந்த ஊர் மக்கள் நிலையை பாருங்கள். உடனே இந்த தெய்வங்களை அரசு மீட்கவேண்டும். அண்ணாமலை ஆட்சிக்கு வந்தால் தான் இது நடக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
16-நவ-202210:06:31 IST Report Abuse
Cheran Perumal அந்தக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அறமில்லா துறை எந்த நடவடிக்கையும் எடுக்க துப்பில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-நவ-202208:21:31 IST Report Abuse
raja காரணம் யாருன்னு தெரியுதா தமிழ் மக்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X