சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ஒன்பது முக்கிய அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம்- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 21 ஆயிரத்து 625 கனஅடி நீர் வரத்து கிடைத்து வருகிறது.ஈரோடு பவானிசாகருக்கு வினாடிக்கு, 3,080; திருப்பூர் அமராவதிக்கு, 2,442; தேனி- முல்லை பெரியாறுக்கு, 1,109; வைகைக்கு, 1,899; திருநெல்வேலி பாபநாசம் அணைக்கு, 1,971; கிருஷ்ணகிரி அணைக்கு, 3,460; திருவண்ணாமலை சாத்தனுார் அணைக்கு, 3,460; கோவை பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 8,205 கன அடி நீர்வரத்து கிடைத்தது. தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.