தனி தமிழ்நாடே இறுதி இலக்காம்: திருமாவளவன் ‛பிரிவினை' பேச்சு

Updated : நவ 17, 2022 | Added : நவ 16, 2022 | கருத்துகள் (192) | |
Advertisement
சென்னை: தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரிவினைவாதம் பேசியது சர்ச்சையாகி உள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அவதுாறாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த
VCK, Thirumavalavan, Tamilnadu, Separate, Hate Speech, விசிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருமாவளவன், தமிழ் தேசியம், தனி தமிழ்நாடு, தனி நாடு, தமிழ்நாடு, சர்ச்சை

சென்னை: தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரிவினைவாதம் பேசியது சர்ச்சையாகி உள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அவதுாறாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.அந்த வகையில் தற்போது பிரிவினையாக அவர் பேசியுள்ளார். பல மாநிலங்கள், கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த தேசத்தில், தமிழ்நாட்டை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் ஜெ.பாரத் என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது: அரசியல் என்பது பதவிக்கான, அதிகாரத்திற்கான, பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.latest tamil news

மிக மிகக் குறைந்த நபர்கள் தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து கட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தான் முக்கிய பொறுப்புகளை பெற்று கட்சியை வழி நடத்துவார்கள்.அடங்க மறுப்போம், அத்து மீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்கையா? கோட்பாடா? இது ஒரு செயல் திட்டம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும் தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம் என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம் தான் அடங்க மறுத்தல், அத்து மீறுதல், திருப்பி அடித்தல்.தனி தமிழ்நாடு


latest tamil news

இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். இது விடுதலைக்கான முழுக்கம், உலகில் ஒடுக்கு முறைக்கு உள்ளான அனைவருக்குமான முழக்கம்.தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாக தான் மத்திய அரசு இருக்க வேண்டும்.மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில் பிற இனத்தினர் மீது வெறுப்பை உமிழக்கூடாது. தமிழ்தேசிய இயக்கத்தில் பிறகட்சிகள் செய்ய முடியாததை விசிக சாத்தியப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (192)

srinivasan - stockholm,சுவீடன்
23-நவ-202214:19:55 IST Report Abuse
srinivasan great great politician. just joking.
Rate this:
Cancel
Balakrishnan - Kanyakumari,இந்தியா
19-நவ-202214:02:52 IST Report Abuse
Balakrishnan இங்கே ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது "பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும், பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்" இவனைப்பற்றி சொல்ல இதற்கு மேல் ஒரு வார்த்தை தேவை இல்லை என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
18-நவ-202219:21:42 IST Report Abuse
Paraman இந்த நரகல் ஜென்மமே தன வாயால "இறுதி இலக்கு " என்று சொல்லி இருப்பதன் மூலம் வெகு விரைவில் இவனுடைய இறுதி ஊர்வலத்தை இந்த நாடும் மக்களும் கண்டு மகிழ்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X