மயிலாடுதுறை: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிஅதிமுக.ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்
ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது சந்திக்க வேண்டும் என்பது இல்லை என எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பழனிசாமி, அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் ஏழைகள் பாதிக்கப்படும் போது எல்லாம் அ.தி.மு.க., துணை நிற்கும். அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகளில் 2 முறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட ஏழைகளுக்காக அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க., அரசு படிப்படியாக நிறுத்தி வருகிறது. இவ்வாறு பழனிசாமி பேசினார்.
சீர்காழி பகுதிகளில் மழை பழனிசாமி ஆய்வு
சீர்காழியில் மழை பாதித்த பகுதிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று(நவ.,16) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழியில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் 14-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி அருகே உள்ள நல்லூர், பன்னீர்க்கோட்டம், ஆலங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து உரிய நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். உடன் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் பவுன்ராஜ், பாரதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
அவசியமில்லை
பிறகு நிருபர்களுக்கு பழனிசாமி அளித்த பேட்டி:தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜ. , தேசியகட்சி . ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது சந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதிமுக பாஜ., என்பது இரு வேறு கட்சி.
2024 ல் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும். தினகரன் அறிவிப்பு கொடுத்தாலும் அதிமுக.,வில் ஒரு சதவீதம் கூட கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.