இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்களே: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு

Updated : நவ 16, 2022 | Added : நவ 16, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
சுர்குஜா: இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துத்துவம் தான் உலகில் அனைவரையும் அழைத்து செல்வதை நம்புகிறது. இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்எஸ்எஸ்
Living in India, Hindu, RSS chief, Mohan Bhagwat, இந்தியா, ஹிந்து, ஆர்எஸ்எஸ், மோகன் பகவத்

சுர்குஜா: இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துத்துவம் தான் உலகில் அனைவரையும் அழைத்து செல்வதை நம்புகிறது.இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்ட 1925ல் இருந்தே கூறி வருகிறோம். மதம், கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை தங்கள் தாய் மண்ணாக கருதி, வேற்றுமையில் ஒற்றுமை பண்பாட்டுடன் வாழ விரும்புவோர் ஹிந்துக்கள் தான்.latest tamil news

ஹிந்துத்துவாவின் சித்தாந்தம் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது; மக்களிடையே ஒற்றுமையை நம்புகிறது. அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ.,வும் ஒன்றுதான். பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக்கூடாது. ஒவ்வொரு பாதையும் ஒரு பொதுவான இடத்திற்கு இட்டுச்செல்கிறது. அனைத்து மத நம்பிக்கைகளையும் அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும். மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் சுயநலமாக இருக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (34)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-நவ-202217:16:26 IST Report Abuse
Rafi நாங்கள் ஆங்கிலேயர்களிடம் போராடி பெற்று பெற்ற இந்த தேசத்தில் நாங்கள் இந்தியர்கள் என்பதை மற்றவர்களை விட கூடுதலாக எப்போதும்மே பெருமையோடு இருப்போம். சில கயவர்கள் எங்களை பிரிக்க முற்பட்டாலும் எங்களின் சேவைகள் பாதிக்கபடும் மக்களோடு எப்போதும் இணைந்தே இருப்போம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
16-நவ-202221:18:31 IST Report Abuse
தமிழ்வேள் இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் பிடிக்கவில்லை என்றால், பாரதம்,பாரதீயன், சனாதனி என்று கூட அழைக்கலாம்...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-நவ-202221:08:42 IST Report Abuse
vbs manian அமெரிக்காவில் இருப்பவர் அமெரிக்கர்கள் . ஐரோப்பாவில் இருப்பவர் ஐரோப்பியர். பிரிட்டனில் உள்ளவர் பிரிட்டிஷ். ஆஸ்திரேலியாவில் இருந்தால் ஆஸ்திரேலியான். இங்கு இருப்பவர் இந்தியர்கள்.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
17-நவ-202200:19:43 IST Report Abuse
பெரிய ராசு இந்தியாவில் இருப்பவர்கள் ஹிந்துஸ்தானி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X