வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக பெண் ஏ.டி.ஜி.பி., காருக்கு ரூ.500 ஐ அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். அப்போது, காரில் பெண் அதிகாரி இல்லை என கூறப்படுகிறது.
பெண் ஏடிஜிபி.,யின் கார் சென்னையில் ஒரு வழிப்பாதையில் சென்றதாக சமூக வலைதளத்தில் படம் வெளியானது.
இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் அதில் கேள்வி எழுப்பப்பட்டது. இது சென்னை போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு வந்ததும், அந்த கார் குறித்து விசாரித்து, புகார் தெரிவித்தவருக்கு சமூக வலைதளத்திலேயே பதிலளித்துள்ளனர்.

அதில், தவறான பாதையில் சென்றதற்காக கார் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் கட்டிவிட்டார். தொடர்ந்து, இவ்வாறு மீண்டும் தவறு செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள போலீசார், அபராதம் வசூலித்த சலானையும் வெளியிட்டுள்ளனர். அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.
