ஈரோடு: ஈரோடு அருகே, தனது காலில் விழுந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவரின் காலை அண்ணாமலை தொட்டு பதிலுக்கு கும்பிட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைவாழ் மக்கள் வசிக்கும் தாமரைக்கரை பகுதிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல், இங்கு தங்களுக்கு ஜாதி சான்றிதழ் இங்கு வழங்கப்படுவதில்லை.
இதனால், கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக அழுதபடி அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அதனை அண்ணாமலை பெற்றுக் கொண்ட போது, அவரது காலில் மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் விழுந்தார். உடனடியாக அவரை தூக்கிவிட்ட அண்ணாமலை , அவரது காலை தொட்டு கும்பிட்டார். அழுதபடி இருந்தவருக்கு ஆறுதல் கூறியதுடன் தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.

பிறகு, அந்த பகுதியை சேர்ந்த பூமிகா வெள்ளையன் என்பவரது வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, களி உணவை கேட்டு வாங்கி அருந்தினார்.