‛நம்பர் 1' தமிழ் வெப்சைட் தினமலர் !

Updated : நவ 18, 2022 | Added : நவ 16, 2022 | கருத்துகள் (173) | |
Advertisement
உலகின் நம்பர் 1 தமிழ் வெப்சைட் தினமலர். இது அநேகருக்கு தெரிந்த உண்மை. சமூக ஊடகத்தில் தினமும் ஒரு தடவையாவது எட்டிப் பார்க்கும் தமிழர்களுக்கு நன்றாக தெரிந்த உண்மை.இன்டரேக்ஷன் ரேட் என்பது பலருக்கு புரியாது. ஒரு செய்தியை போஸ்ட் செய்கிறோம் என்றால், அதை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் முழுவதும் படித்தார்கள், அதில் எத்தனை பேர் ரியாக்ட் செய்தார்கள் என்பதை

உலகின் நம்பர் 1 தமிழ் வெப்சைட் தினமலர். இது அநேகருக்கு தெரிந்த உண்மை. சமூக ஊடகத்தில் தினமும் ஒரு தடவையாவது எட்டிப் பார்க்கும் தமிழர்களுக்கு நன்றாக தெரிந்த உண்மை.



latest tamil news


இன்டரேக்ஷன் ரேட் என்பது பலருக்கு புரியாது. ஒரு செய்தியை போஸ்ட் செய்கிறோம் என்றால், அதை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் முழுவதும் படித்தார்கள், அதில் எத்தனை பேர் ரியாக்ட் செய்தார்கள் என்பதை கணக்கிடுவதற்கு பெயர் இன்டரேக்ஷன் ரேட்.


ரியாக்ட் செய்வது பல வழிகளில் இருக்கலாம். லைக் செய்வது, கமென்ட் போடுவது, ஷேர் பண்ணுவது என பல வகை உண்டு. அதாவது, ஒரு செய்தியை பார்ப்பவர் அல்லது படிப்பவர் அப்படியே அடுத்த செய்திக்கு போய்விட்டார் என்றால் அது மொக்கை செய்தி. ஏதோ ஒரு வகையில் அவர் ரியாக்ட் செய்கிறார் என்றால் மட்டுமே அது தரமான செய்தி என அர்த்தம்.



சரி, இதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? ரொம்ப அதிகம் இல்லை. செய்தியை பார்த்த அல்லது படித்தவர்களில் ஒரே ஒரு சதவீதம் பேராவது ரியாக்ட் செய்தார்கள் என்றால் ஓகே, பரவாயில்லை, பிழைத்துப் போ என்கிறது பேஸ்புக்.


அப்படி என்றால் தினமலர் செய்திகளுக்கான இன்டரேக்ஷன் ரேட் என்ன?


ஏறத்தாழ 40 சதவீதம்!


இதிலும் தினமலர் தான் நம்பர் 1.


தமிழ், ஆங்கிலம், காலை நாளிதழ், மாலை நாளிதழ், வார இதழ், வாரம் இருமுறை இதழ்.. என எந்த வரிசையில் பார்த்தாலும் தினமலர் தான் டாப் என்கிறது பேஸ்புக் எடுத்த கணக்கு.


யார் என்ன சொல்கிறார்களோ, எங்கே என்ன நடந்ததோ அதை எல்லாம் அப்படியே செய்தியாக்கி போட்டு விட்டு கடந்து செல்லும் ஊடகம் அல்ல தினமலர் என்பது எல்லோருக்கும் தெரியும்.


யார் என்ன சொன்னாலும் அதை ஏன் சொன்னார், அதன் பின்னணி என்ன, அதனால் வரக்கூடிய விளைவுகள் என்ன என்பதை அலசி ஆராய்ந்து முழுமையான செய்தி தரும் ஒரே நாளிதழ் தினமலர் என்பது இந்த ஆய்வில் ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.


சம்பவங்களுக்கும் இது பொருந்தும். அது அரசியல் ஆனாலும் சரி, அரசு திட்டமாக இருந்தாலும் சரி. தோண்டித் துருவி மொத்த உண்மைகளையும் வாசகர்/நேயர் பார்வைக்கு சமர்ப்பணம் செய்வதையே முக்கால் நூற்றாண்டு காலமாக தவமாக செய்து வருகிறது தினமலர்.



latest tamil news

தினமலர் என்ன செய்தி வெளியிட்டாலும் அதை பொய் என்று மக்களை நம்பவைக்க பகீரத பிரயத்னம் செய்யும் சில நூறு நல்ல உள்ளங்களின் கடுமையான உழைப்பு இல்லாமல் இந்த சாதனை சாத்தியம் அல்ல.


அன்பும் நம்பிக்கையும் நல்ல எண்ணங்களும் கொண்ட எமது வாசகர்கள் நேயர்கள் மட்டுமல்லாது தினமலருக்கு எதிராக எழுதுவதற்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள "அவர்களுக்கும்" இந்த நேரத்தில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



வாழ்க இந்தியா, வளர்க தமிழகம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (173)

M.Y.Pakkee - Cuddalore,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202212:20:35 IST Report Abuse
M.Y.Pakkee மாநில அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது போல் மத்திய அரசின் தவறுகளையும் எழுதினால்தான் ...
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
18-நவ-202211:22:06 IST Report Abuse
ديفيد رافائيل Dinamalar website ல மட்டும் தான் நான் news பாக்குறேன் daily
Rate this:
Cancel
18-நவ-202208:50:34 IST Report Abuse
nkumardpm@gmail.com 100 உண்மையான செய்திகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X