சிதம்பரம், : அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை தேசிய வேளாண் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு நடந்தது.
துணைவேந்தர் கதிரேசன், வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இராமசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர்
சீத்தாராமன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், இணைப் பேராசிரியர் பாபு, தேசிய வேளாண் நிறுவன இயக்குநர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சிறு மற்றும் குறு விவசாயிகள், கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் மற்றும் ஆண்டு வருமானத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.