சென்னை-'ஏஜன்டுகளை வஞ்சிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ஆவின் பால் விற்பனை புறக்கணிக்கப்படும்' என தமிழக பால் ஏஜன்டுகள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
ஆவின் நிறுவனத்தை, தனியார் நிறுவனத்திற்கு தாரவார்க்கும் பணி சத்தமின்றி நடந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
ஆவின் பாலகங்களை நடத்துபவர்களுக்கு, நெய் உள்ளிட்ட பால் பொருட்களை முறையாக வினியோகம் செய்வதில்லை.
கடந்த 5ம் தேதி பால் கொள்முதல் உயர்வு காரணமாக, ஆரஞ்ச் பாக்கெட் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு லிட்டர் 46 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கோவையில் உள்ள தனியார் நிறுவன மார்க்கெட்டில், 1 லிட்டர் 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக பாலகங்களை நடத்துபவர்களிடம், ஆவின் நிர்வாகம் உறவை முறித்து, தனியார் நிறுவனத்துடன் ஒட்டி உறவாடும் பணியை, தமிழக அரசு சத்தமின்றி செய்து வருகிறது.
பாலகங்களை நடத்தும் ஏஜன்டுகளை அழிக்க, ஆவின் நிர்வாகம் சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
![]()
|
பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டாலும், 1 லிட்டர் பால் விற்பனை செய்யும் ஏஜன்டுகளுக்கு, 2 ரூபாய் மட்டுமே கமிஷனாக வழங்கப்படுகிறது.
ஆவின் முதுகெலும்பாக இருக்கும் ஏஜன்டுகளை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை, தமிழகம் முழுதும் புறக்கணிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement