ஒரு வைரஸ் எப்படி நகர்கிறது, தொற்றுகிறது என்பதை நிகழ் நேரத்தில் பார்ப்பது மிகவும் கடினம். நுண்நோக்கி மூலம் படம் பிடிக்கலாம். ஆனால் மில்லி செகண்ட் துல்லியமாக அதன் ஒவ்வொருஅசைவையும் விடாமல் பார்ப்பது நேற்று வரை கடினமாகவே இருந்தது.
ஆனால், அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலை விஞ்ஞானிகள், ஒரு முப்பரிமாண நுண்ணோக்கி மற்றும் லேசர் கதிர் ஒளியூட்டல் போன்ற கலவையான உத்திகள் மூலம் முதல் முறையாக ஒரு வைரஸ் ஒரு செல்லை தொற்றுவதை வீடியோவில் படம் பிடித்துள்ளனர். ஒரு செல்லைவிட பல நுாறு மடங்கு சிறியது வைரஸ். இதனால்தான் இந்த வீடியோ படப்பிடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.