சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஐ.பி.எம்.,மின் 'ஆஸ்ப்ரே' குவாண்டம் கணினி சில்லு!

Added : நவ 17, 2022 | |
Advertisement
கணினி உலகில் பெரிய தாதாவாக இருந்த ஐ.பி.எம்., குவாண்டம்கணினி துறையில் ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டிருக்கின்றது. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, அண்மையில் 'ஆஸ்ப்ரே' என்ற குவாண்டம் கணினியின் மூளையாக செயல்படும், சில்லு ஒன்றை வெளியிட்டுள்ளது.ஆஸ்ப்ரே சில்லு, குவாண்டம் கணினி உலகில் முக்கியமான வரவு. ஐ.பி.எம்.,மின் குவாண்டம்பிரிவு வெளியிட்டிருப்பதால் மட்டுமல்ல, சிலிக்கன்
Quantum computer, IBM Osprey chip, Silicon chip,ஐபிஎம், ஆஸ்ப்ரே சில்லு, குவாண்டம் கணினி சில்லு, சிலிக்கன் சில்லு,  quantum computer chip, ibm,  osprey chip,

கணினி உலகில் பெரிய தாதாவாக இருந்த ஐ.பி.எம்., குவாண்டம்கணினி துறையில் ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டிருக்கின்றது. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, அண்மையில் 'ஆஸ்ப்ரே' என்ற குவாண்டம் கணினியின் மூளையாக செயல்படும், சில்லு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆஸ்ப்ரே சில்லு, குவாண்டம் கணினி உலகில் முக்கியமான வரவு. ஐ.பி.எம்.,மின் குவாண்டம்பிரிவு வெளியிட்டிருப்பதால் மட்டுமல்ல, சிலிக்கன் சில்லு கணினிகளின் திறனைவிட, பல நுாறு மடங்கு கணினித் திறன் கொண்ட குவாண்டம் கணினிகளுக்கு ஆஸ்ப்ரே மூளையாகசெயல்படும்.

வழக்கமான சிலிக்கன் சில்லின் அடிப்படையிலான கணினிகள், சுழி மற்றும் ஒன்று ஆகிய இரு எண்களை மட்டுமே கணக்கிடப் பயன்படுத்துபவை. ஆனால், இதை 'பிட்' என்பர். ஆனால், குவாண்டம் கணினிகள் க்யூபிட் என்ற நான்கு எண்களைக் கொண்டு கணிக்கும். ஆஸ்ப்ரே குவாண்டம் சில்லின் கணிக்கும் ஆற்றல் 433 க்யூபிட்டுகளாக இருக்கும். இதை தவிர, பல புதிய குவாண்டம் கணினி சில்லுகள் மற்றும் கணினிகள் அடுத்த ஆண்டு வரப்போகின்றன.

சிறிய, நடுத்தர கணினிகளை தயாரிப்பதை நிறுத்தி சில பத்தாண்டுகளாகின்றன. இப்போது, அதன் முழு கவனமும் அதிதிறன் கணினிகள் மற்றும் குவாண்டம் கணினிகளின் பக்கம் குவிந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X