வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் மறைந்த பால்தாக்கரே நினைவிடத்தில் ஏக்நாத் ஷிண்டே மரியாதை செலுத்தி விட்டு சென்றவுடன் அந்த இடத்தை உத்தவ் தாக்கரே கட்சியினர் பசு மாட்டு கோமியத்தால் சுத்தம் செய்தனர்.
மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால், உத்தவ் தலைமையிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் சிவசேனா கட்சி இரு வேறு அணியாக பிரிந்தது. கட்சியின் சின்னமான வில் அம்பு தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது.
![]()
|
இந்நிலையில் சிவசேனா கட்சியை நிறுவிய மறைந்த பால்தாக்கரே 10-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு வந்த உத்தவ் தாக்கரே அணியின் பசு மாட்டு கோமியத்தால் பால்தாக்ரே நினைவிடத்தை சுத்தம் செய்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இதை செய்ததாக உத்தவ் கட்சி நிர்வாகி கூறினார்.