தி.மு.க., கூட்டணியில் மாறும் 'டிரெண்ட்!'

Updated : நவ 19, 2022 | Added : நவ 17, 2022 | கருத்துகள் (78) | |
Advertisement
சென்னை :லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழகத்தில் கூட்டணி நிலைப்பாட்டை, பல கட்சிகள் மாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. அதை பயன்படுத்தும் விதமாக, ராமதாஸ், கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை சேர்த்து, கூட்டணியை விரிவுபடுத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில் உட்கட்சி குழப்பம், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள
dmk, kamalhaasan, vijayakanth, Duraimurugan, admk, bjp, திமுக, கூட்டணி, கமல்,விஜயகாந்த்,   டிரெண்ட்

சென்னை :லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழகத்தில் கூட்டணி நிலைப்பாட்டை, பல கட்சிகள் மாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. அதை பயன்படுத்தும் விதமாக, ராமதாஸ், கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை சேர்த்து, கூட்டணியை விரிவுபடுத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில் உட்கட்சி குழப்பம், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக, இப்படியொரு புதிய வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்கான வேலைகளை, முக்கிய அரசியல் கட்சிகள் இப்போதே துவங்கியுள்ளன. 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைத்தது.


திரைமறைவு பேச்சுஇதனால், 2024 லோக்சபா தேர்தல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது. இதை கருத்தில் வைத்தே, செப்டம்பர் 7ல் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை ராகுல் துவங்கியுள்ளார்.

காங்கிரஸ் மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட மாநில கட்சிகளும், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து, திரைமறைவு பேச்சு நடத்தி வருகின்றன. மொத்தம் 80 எம்.பி., தொகுதிகள் உள்ள உ.பி.,யில், 2019-ல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தும், பா.ஜ.,வை வீழ்த்த முடியவில்லை.

எனவே, 2024-ல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்,- காங்கிரஸ் கூட்டணியை உருவாக்க, அகிலேஷ் யாதவ் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

உ.பி.,க்கு அடுத்து அதிகமாக, 48 எம்.பி., தொகுதிகள் உள்ள மஹாராஷ்டிராவில், காங்கிரஸ்,- தேசியவாத காங்கிரஸ்,- சிவசேனா கூட்டணியை, தேர்தல் கூட்டணியாக மாற்ற சரத் பவார் முயற்சி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுலின் பாதயாத்திரையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். 40 தொகுதிகளை கொண்ட பீஹாரில், ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம் -- ராஷ்ட்ரீய ஜனதாதளம் -- காங்கிரஸ் கூட்டணி உருவாகியுள்ளது.தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய ஒன்பது கட்சிகள் அடங்கிய கூட்டணி, 39 லோக்சபா தொகுதிகளில் வென்றது.

இதில், இந்திய ஜனநாயக கட்சி, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி உட்பட, ஒன்பது கட்சிகள் உள்ளன. 2019-ல் தி.மு.க., எதிர்க்கட்சி. ஜெயலலிதா மறைவுக்கு பின், தி.மு.க., கூட்டணி கட்சிகள் மேற்கொண்ட எதிர்ப்பு பிரசாரத்தால், பிரதமர் மோடிக்கு எதிரான அலையும் இருந்தது.

ஆனால், இப்போது தி.மு.க., ஆளும் கட்சி; 2019-ல் இருந்தது போல, மோடிக்கு எதிர்ப்பும் இல்லை. அண்ணாமலை தலைமையில் பா.ஜ.,வுக்கு எழுச்சியும் ஏற்பட்டு இருக்கிறது.கடந்த 2019-ல் ராகுல் தான் பிரதமர் என, தமிழக மக்களிடம் தி.மு.க., செய்த பிரசாரம் எடுபட்டது.
ஆனால், இப்போது மீண்டும் மோடி தான் பிரதமர் என தமிழக மக்கள் நினைப்பதாக, பல்வேறு கருத்துக் கணிப்புகளும் வந்துள்ளன.

இதுவரை நடந்த 17 லோக்சபா தேர்தல்களிலும் யார் பிரதமராக வர வாய்ப்புள்ளதோ, அவர்களுக்கே தமிழக மக்கள் ஓட்டளித்துள்ளனர். 2014-ல் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, பா.ஜ., அமைத்த கூட்டணி, 19 சதவீத ஓட்டுகளையும், இரண்டு எம்.பி., தொகுதிகளையும் பெற்றது.


உட்கட்சி பிரச்னைஇத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. கன்னியாகுமரி, கோவை, வேலுாரில் மூன்றாவது இடத்தை தான் தி.மு.க., பெற்றது.உட்கட்சி பிரச்னைகளால் அ.தி.மு.க.,வில் குழப்பம் அதிகரித்துள்ளது. பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் கோரிக்கையை, பழனிசாமி ஏற்க மறுத்து விட்டார்.இதனால், பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், அ.தி.மு.க.,வை நம்பி பலனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.

இதனால், இந்த இரு கட்சிகளும் தி.மு.க., அரசு மீதான விமர்சனத்தை தவிர்த்து வருகின்றன. இவற்றையெல்லாம் ஆலோசித்து வரும் தி.மு.க., தலைமை, பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளையும் புதிதாக சேர்த்து, கூட்டணியை விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


தனிப் பெரும்பான்மைசட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,வுடன் நெருக்கம் காட்டி வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அக்கட்சியுடன் கூட்டணிக்கு தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

சமீபத்தில் நடந்த தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அமைச்சர் துரைமுருகன், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி உள்ளிட்டோர், லோக்சபா தேர்தல் குறித்து பேசியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

வரும் 2024-ல் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மோடி பிரதமரானால், தி.மு.க.,வுக்கு அதிக எம்.பி.,க்களாவது இருக்க வேண்டும்; இல்லையெனில் நிலைமை மோசமாகி விடும் என, முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.எனவே, தி.மு.க., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவது உறுதி என்றும், இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பழைய கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும், அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது: அமைச்சர் துரைமுருகன் ஒப்புதல்

''தமிழகத்தில், பா.ஜ., ராட்சசன் போல வளர்ந்து வருகிறது,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியில் நேற்று முன்தினம் மத்திய மாவட்ட, தி.மு.க., செயலர் நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், துரைமுருகன் பேசியதாவது:இந்தியாவில், 100 ஆண்டுகள் கடந்தது திராவிட இயக்கம். இந்த இயக்கத்தால் தான் நாம் படிக்க முடிந்தது. இல்லாவிட்டால் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்திருப்போம். இந்த இயக்கத்தை, 50 ஆண்டுகளாக கட்டிக்காத்தவர் கருணாநிதி. அதை, இப்போது ஸ்டாலின் செய்து வருகிறார்.நாம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். நமக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், 7 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளனர்.இப்போது, முதியோர் பென்ஷன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நிதி இலாகாவில் உள்ளவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். சில அதிகாரிகளுக்கு, நாம் வந்ததே பிடிக்கவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். இதுவரை, அ.தி.மு.க., தான் நமக்கு எதிரியாக இருந்தது. ஆனால், இப்போது, பா.ஜ., ராட்சசன் போல வளர்ந்து வருகிறது. பண பலம், அதிகார பலத்துடன், பா.ஜ., பிசாசு மாதிரி உருவெடுத்து, சம பலத்துடன் போராடுவர். இதனால், அவர்களையும் சேர்த்து எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது.


எம்.பி., தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த முறை, 40க்கு 40 வெற்றி பெற வேண்டும். அப்போது தான் மத்திய அரசு நம்மை பார்த்து பயப்படும். இந்த முறை நாம், பெரிய பண திமிங்கலத்தை எதிர்ப்பதால், யாருடன் கூட்டணி என்பதை ஸ்டாலின் பார்த்துக் கொள்வார். என் அனுபவம், வயது, ஸ்டாலினுக்கு இல்லை. ஆனால், என்னை மிஞ்சக்கூடிய அளவுக்கு அவரை கருணாநிதி வளர்த்து விட்டுள்ளார். என்னை வளர்ந்த என் தலைவன் மகனை, என் தோளில் சுமப்பதில் எனக்கென்ன வெட்கம்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
19-நவ-202213:03:44 IST Report Abuse
Nakkeeran தமிழக அரசியல் என்பது புரியாத புதிர் . வாக்காளர்களின் மனா நிலை ஒவ்வொரு தொகுதிக்கும் மாறுபட்டிருக்கிறது.முப்பது லட்சம் வாக்குகள் வாங்கிய (மூன்றாவது பெரிய கட்சி ) நாம் தமிழருக்கு சட்டசபையில் ஒரு MLA கூட கிடையாது .கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் வாக்கு வாங்கிய மக்கள் நீதி மையம் ஜீரோ ஆனால் ஒரு பெரிய மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து நாலரை லட்சம் வாக்குகள் வாங்கிய விசிகாவுக்கு நான்கு MLA...நமது electoral tem அப்படிப்பட்டது .
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
18-நவ-202223:26:58 IST Report Abuse
Mohan ஏமாறும் டிரெண்ட்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
18-நவ-202223:03:13 IST Report Abuse
jagan கம்யூனிஸ்டுக்கே 25 கோடி என்ற செய்தி வந்தவுடனே, திருவோட்டுடன் நீங்க சொல்லும் பார்ட்டிகள் அங்கே போக ரெடி ஆயாச்சு. கமல் படம் ஓடணும்னா உததை நிதி காலை நக்கியே தீரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X