வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்-பிரிட்டன் - இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்துக்கு, அந்நாட்டின் தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் இடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
![]()
|
இந்தியாவைச் சேர்ந்த, 18 - 30 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுனர்கள் இரண்டு ஆண்டுகள் பிரிட்டனில் தங்கியிருந்து படிக்கவும், பணியாற்றவும், 'விசா' வழங்கும் பிரிட்டன் - இந்தியா இளம் வல்லுனர்கள் திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் நேற்று முன்தினம் அறிவித்தார்.
![]()
|
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3,000 இளைஞர்களுக்கு விசா வழங்கப்பட உள்ளது.
இதே போல, பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இந்திய அரசு விசா அளிக்க உள்ளது.
இதை மிகச்சரியான முடிவு என, லண்டன் மேயர் நிகோலஸ் லயான்ஸ் பாராட்டி உள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த தொழில் துறையினர் மற்றும் மாணவர்கள் இடையே இத்திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
'இது வாழ்நாள் வாய்ப்பு' என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement