மதுரை: '' கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது'', என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில், கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுக்கான மரியாதையே இல்லாமல் போய் விட்டது. சாதனையாளர்களுக்கு பதில் 2 படங்களில் நடித்தாலே விருது வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? 2021ல் விருது வழங்கியவர்கள், தற்போது விருது வழங்கப்பட உள்ளவர்கள் குறித்து தமிழக சுற்றுலா, கலைத்துறை செயலாளர் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.