பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை. ஓயமாட்டோம்!

Updated : நவ 20, 2022 | Added : நவ 18, 2022 | கருத்துகள் (31+ 43) | |
Advertisement
புதுடில்லி ;''நாட்டை பாதிக்கும் பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்தவும், புறக்கணிக்கவும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, புதுடில்லியில் நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் மோடிபேசினார். பயங்கரவாத விஷயத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகளையும் பிரதமர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதம், மாநாடு, ஓயமாட்டோம்!, மோடி, ஆவேசம்

புதுடில்லி ;''நாட்டை பாதிக்கும் பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்தவும், புறக்கணிக்கவும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, புதுடில்லியில் நேற்று நடந்த மாநாட்டில் பிரதமர் மோடிபேசினார். பயங்கரவாத விஷயத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகளையும் பிரதமர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்து விவாதிக்கும் சர்வதேச அளவிலான இரண்டு நாள் மாநாடுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம்ஏற்பாடு செய்துள்ளது.
புதுடில்லியில் நேற்று துவங்கிய இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
பயங்கரவாத தாக்குதல்எங்கு நடந்தாலும், அது கண்டனத்துக்குரியது தான். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்; இதை பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதம் என்பது, மனித நேயம், சுதந்திரம், நாகரிகம் ஆகியவற்றின் மீதான தாக்குதல். இதற்கு எல்லைகள் எதுவும் இல்லை. ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் வாயிலாக மட்டுமே பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும்.


அபராதம்உலக நாடுகள் பயங்கரவாதத்தின் தாக்கத்தை உணர்வதற்கு நீண்ட காலத்துக்கு முன், இந்தியா, அதன் விளைவுகளை சந்தித்து விட்டது. இந்தியாவில் பல்வேறு காலங்களில், பல பெயர்களில் பயங்கரவாதம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை பயங்கரவாதத்துக்கு இழந்து விட்டோம். ஆனாலும் பயங்கரவாதத்தை ஒழிக்க துணிச்சலுடன் போராடி வருகிறோம்.

பயங்கரவாதத்தை வேருடன் பிடுங்கி எறிவதற்கான நடவடிக்கை தேவை. பயங்கரவாதம் ஒவ்வொருவரது வீட்டின் கதவுகளையும் தட்டும் வரை காத்திருக்க முடியாது. பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களுக்கு வரும் நிதி ஆதாரங்களை கண்டறிந்து, அடியோடு தடுக்க வேண்டும். அவர்களது ஆதரவு வளையத்தை உடைத்தெறிய வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையும், அவர்களுக்கு நிதி உதவி செய்வதையும் சில நாடுகள், தங்கள் வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக வைத்து செயல்படுகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, அதை சில நாடுகள் தடுக்கின்றன.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, பயிற்சி அளிப்பது என, பயங்கரவாதிகளின் புகலிடமாக சில நாடுகள் செயல்படுகின்றன.

இதுபோன்ற நாடுகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்களை, சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாடுகளை புறக்கணிக்க வேண்டும். அந்த நாடுகளுக்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.போர் இல்லாவிட்டால் அமைதி நிலவும் என சர்வதேச அமைப்புகள் கருதக்கூடாது. மறைமுக போர்களும் ஆபத்தானவை தான்.


மிகப் பெரிய சவால்ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் ஆகியவற்றின் வாயிலாக கிடைக்கும் பணம், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்கின்றன. போதை மற்றும் ஆயுத கடத்தல் கும்பலுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் ஆழமான தொடர்பு உள்ளது. பயங்கரவாதிகள் தங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவதில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்; இது, நமக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதை முறியடிக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, 450க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அங்கிருந்தும் யாரும் வரவில்லை.

இந்தியாவில் தாக்குதல் நடத்தி விட்டு, பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகள் மீது, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது.அதேபோல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை துாண்டி விடுவதை, பாகிஸ்தான், தன் கொள்கையாகவே வைத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளையும் விமர்சிக்கும் வகையிலேயே, பிரதமர் இந்த மாநாட்டில் பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

'பயங்கரவாதத்தை மதத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது'

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்து புதுடில்லியில் நடந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: சர்வதேச அளவிலான அமைதிக்கும், சமாதானத்துக்கும், பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு, நிதி அளிப்பது, பயங்கரவாதத்தை விட அபாயகரமானது. இதுபோன்ற நிதியுதவிகள் தான்பயங்கரவாதத்தை வளர்க்கின்றன. இத்தகைய நிதி அளிப்புகள், பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல்களை நாடு, மொழி, இனம், மதம் ஆகிய எவற்றுடனும் தொடர்புபடுத்த முடியாது.அவ்வாறு தொடர்புபடுத்தவும் கூடாது.பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான கட்டமைப்பை இந்தியா நன்கு செய்து வருகிறது. பாதுகாப்பு உட்கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் கடுமையான நிதிக் கட்டுப்பாடுகள் வாயிலாகவும், இந்த கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. பயங்கரவாத செயல்கள்எத்தகைய வடிவங்களில் நடந்தாலும், அதற்கு என்ன மாதிரியான நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும், அவற்றை இந்தியா ஏற்காது.


நவீன ரக ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பம், நிதி திரட்டுவது ஆகியவற்றை கையாள்வதில் பயங்கரவாதிகள் திறமையை காட்டுகின்றனர்.இவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டுமெனில் அனைத்து நாடுகளும் ஓரணியில் நின்று போராட வேண்டும். இவ்விஷயத்தில், உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும். பொதுவான செயல்முறை திட்டம் வகுத்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டே, அதற்கு துணை போகும் இரட்டை நிலைப்பாடு உடைய நாடுகளை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
asddf - chennai,இந்தியா
19-நவ-202221:16:24 IST Report Abuse
asddf வாய்ச்சொல் வீரர்களுக்கெல்லாம் வீரன் மோடி
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-நவ-202219:24:49 IST Report Abuse
Ramesh Sargam பயங்கரவாதத்தை வேர் அறுக்க வேண்டும். கூடவே, பயங்கரவாதத்திற்கு துணைபுரிவோரையும் வேர் அறுக்க வேண்டும்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-202218:40:12 IST Report Abuse
venugopal s அதெப்படி, இதுவரை நான் பார்த்த எல்லா பிரதமர்களும் இதே வசனத்தை தவறாமல் அவ்வப்போது பேசுகின்றனர்?
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
19-நவ-202220:58:57 IST Report Abuse
Barakat Aliநீயி நல்லா யோசிச்சி பாரு .... அப்பல்லாம் டீம்கா டுமீல்நாட்டுல அதிகாரத்தில் இருந்திருக்கும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X