சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க திட்டம்: நிதின் கட்கரி

Updated : நவ 19, 2022 | Added : நவ 19, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை

புதுடில்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
latest tamil news


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.


இது தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதில் கடிதத்தை திமுக எம்பி பி.வில்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது பதில் கடிதத்தில், 'சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம்.latest tamil news


பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக அமைச்சர் நிதின் கட்கரிக்கு எம்பி வில்சன் நன்றி தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (26)

g.s,rajan - chennai ,இந்தியா
20-நவ-202202:48:58 IST Report Abuse
g.s,rajan நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் பொது மக்களை சாவடிக்கும் வகையில் கட்டணங்கள் வசூலித்தால் சாமானியன் என்ன செய்வது. எப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் பயணிப்பது? எரிபொருள் விலை ஒரு புறம் மிரட்டுது, சுங்கக் கட்டணம் மறுபுறம் மிரட்டுது, மொத்தத்தில் பொது மக்கள் கொதித்துப்போய் உள்ளனர், பொதுவாக எல்லாரிடத்திலும் நியாயமான கட்டணங்களை வசூலியுங்கள் இல்லையேல் மக்கள் புரட்சி ஒரு நாள் நிச்சயம் வெடிக்கும் பகல் கொள்ளை அடிக்காதீர்கள், சாலைகள் பலவற்றில் போட்ட முதலீடுகளை எடுத்த பின்னும் இன்னும் எதற்காக சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது?? இதன் உண்மையான வரவு ,செலவு மற்றும் பராமரிப்பு கணக்கு என்ன? தெளிவான அறிக்கை தேவை .
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-202202:34:04 IST Report Abuse
hari Road tax paid to state government. Central government maintained national highway they brought private to built and operate NH. without private participation we could have not got this volume of MH throught the country. state govt Road conditions are really poor.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-நவ-202223:11:44 IST Report Abuse
g.s,rajan இந்தியா முழுவதும் அடிக்கும் இந்தப் பகல் கொள்ளையை முதலில் நிறுத்துங்க ,பை பாஸ் சாலைகளில் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மத்திய அரசின் கட்டணக்கொள்ளை வெகு நன்றாக நடக்கிறது ,சாலை வரி அப்பறம் எதுக்கு எல்லா வாகனத்துக்கும் வசூலிக்கிறீங்க ???அரசாங்கமே மக்களிடம் பகல் கொள்ளை அடித்தால் யாரிடம் சென்று முறையிடுவது ???தெரியவில்லை , ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X