'ம்ஹூம்!' காங்கிரசில் இனி ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை

Updated : நவ 21, 2022 | Added : நவ 19, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை:தமிழக காங்கிரஸ் கட்சியில், இனி ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதற்கு, சென்னையில் நேற்று நடந்த இந்திரா பிறந்த நாள் விழா எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவை, ஒட்டுமொத்த கோஷ்டிகளும் புறக்கணித்து, அழகிரிக்கு எதிராக குஸ்திக்கு தயாராகி விட்டதை வெளிப்படுத்தி உள்ளன. இந்த மோதல் போக்கு நீடிக்குமானால், லோக்சபா தேர்தலுக்குள் கட்சி
'ம்ஹூம்!' காங்கிரசில் இனி ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை

சென்னை:தமிழக காங்கிரஸ் கட்சியில், இனி ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதற்கு, சென்னையில் நேற்று நடந்த இந்திரா பிறந்த நாள் விழா எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவை, ஒட்டுமொத்த கோஷ்டிகளும் புறக்கணித்து, அழகிரிக்கு எதிராக குஸ்திக்கு தயாராகி விட்டதை வெளிப்படுத்தி உள்ளன. இந்த மோதல் போக்கு நீடிக்குமானால், லோக்சபா தேர்தலுக்குள் கட்சி துண்டு துாளாகி காணாமல் போய் விடுமோ என்று, கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

வரும் 2024 லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், 15-ம் தேதி, கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.

அப்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமாரை மாற்றக் கோரி, மாநிலப் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.,வுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் காரை மறித்து, முற்றுகை போராட்டம் நடத்தினர்.


நடவடிக்கை


அழகிரிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் களத்தில் இறங்கியதும், இரு கோஷ்டியினரும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்; பலரின் மண்டை உடைந்து, சத்தியமூர்த்தி பவன் ரத்த களரியானது.

அதைத் தொடர்ந்து, ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் மாறி மாறி மேலிடத்தில் புகார் தெரிவித்து வந்த நிலையில், மறைந்த இந்திராவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அலங்கரிக்கப்பட்ட இந்திராவின் படத்திற்கு, அழகிரி உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின், 'இந்தியாவின் வளர்ச்சியில் இந்திராவின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும், சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

பின்னர், செல்வப்பெருந்தகை தலைமையில், அவர்கள் வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.


தலைகாட்டவில்லை


கருத்தரங்க அழைப்பிதழில் பெயர் இருந்தும், சத்தியமூர்த்தி பவன் பக்கமே அவர்கள் தலைகாட்டவில்லை. இதனால் அழகிரியும், அவரது ஆதர வாளர்களும் மட்டுமே கருத்தரங்கில் பேசிச் சென்று விட்டனர்.

கருத்தரங்கில் பேசிய மாநில ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, ''கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது அழகிரி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

'வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை பெற வேண்டுமானால், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, அடுத்த ஓராண்டுக்கு வேறுபாடுகளை மறந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் உழைக்க முன்வர வேண்டும்' என, 15-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான், அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் அழைப்பு விடுத்து, நான்கு நாட்களில், அவருக்கு எதிராக மூத்த தலைவர்கள் அணி திரண்டுள்ளதால், தமிழக காங்கிரசில் இனி ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுஉறுதியாகி உள்ளது.

இந்திரா பிறந்த நாளை கூட ஓரணியில் நின்று கொண்டாட முடியாமல், கோஷ்டி தலைவர்கள் குஸ்தியில் இறங்கி உள்ளனர்.


நெருக்கம்


தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில், அழகிரி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். காங்கிரஸ் அகில இந்திய தலைவராகியுள்ள மல்லிகார்ஜுன கார்கேவிடம், அவர் நெருக்கம் காட்டி வருகிறார்.

இதனால், 2024 லோக்சபா தேர்தல் வரை, தலைவர் பதவியில் நீடித்து விடுவாரோ என்ற சந்தேகம், கோஷ்டி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் தான், அழகிரிக்கு எதிராக அணி திரண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த போக்கு நீடிக்குமானால், லோக்சபா தேர்தலுக்குள் காங்கிரஸ் துண்டு துாளாகி காணாமல் போய் விடுமோ என்று, அக்கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
25-நவ-202211:03:58 IST Report Abuse
Tamilnesan யாரங்கே காங்கிரெஸ்க்காரனை உடனே இங்கு அனுப்பு.. போஸ்டர் ஓட்டணும் இருட்டிலே கண்ணு தெரியலே
Rate this:
Cancel
adad - chennai,இந்தியா
20-நவ-202222:30:44 IST Report Abuse
adad ஒற்றுமையில்லாமல் பாஜ குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும்போது ...
Rate this:
Cancel
adad - chennai,இந்தியா
20-நவ-202222:30:14 IST Report Abuse
adad குஜராத்தில் பல பாஜ தலைவர்கள் எம் எல் ஏக்கள் பாஜாவுக்கு போட்டியாக தினைத்து போட்டியிடுவது ஒற்றுமையின் சின்னமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X