மயிலாடுதுறை அருகே கடல் சீற்றம்: மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

Updated : நவ 21, 2022 | Added : நவ 20, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக 11ம் நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடல் சீற்றம் காரணமாக கடந்த 9ம் தேதி முதல் மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக 11ம் நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடல் சீற்றம் காரணமாக கடந்த 9ம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


இதனால் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டுப் படகுகள் மீன்பிடி துறைமுகங்களிலும், முகத்துவாரம் அருகே உள்ள ஆறுகளிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. மழை சற்று விட்ட நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வின் காரணமாக வரும் நவ., 22ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.



latest tamil news



மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 11 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல செல்லவில்லை. தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டால் மீனவர்களுக்கான தடை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமன்றி மறைமுகமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன.



latest tamil news



இது குறித்து, மயிலாடுதுறை திருமுல்லைவாசல் செல்வம் என்பவர் கூறுகையில், கடந்த 11 நாட்களாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் உடமைகளுக்கும், தொழிலுக்கு செல்ல முடியாமல் உள்ள மீனவர்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கனமழை மற்றும் காற்றினால் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X