கலகத் தலைவனில் அழகின் தலைவி - நிதி அகர்வால்

Added : நவ 20, 2022 | |
Advertisement
ஆகாய துாரிகைகள் சேர்ந்து தீட்டிய ஓவியம்... காலைநேர காற்றலைகள் கூடி எழுதிய காவியம்... உலகின் அழகெல்லாம் நீயே அழகென கொண்டாடும், இளசுகளின் இதயங்களை உன் கண்கள் இரண்டும் இழுத்தே பந்தாடும்... என தமிழ் 'கலகத் தலைவன்' படத்தில் நடிப்பில் கலக்கிய நிதி அகர்வால் மனம் திறக்கிறார்....* 'கலகத் தலைவன்' படம், சரளமான தமிழ் பேச்சு 'கலகத் தலைவன்' படத்தை ரொம்ப ஆர்வமா
கலகத் தலைவனில் அழகின் தலைவி  - நிதி அகர்வால்

ஆகாய துாரிகைகள் சேர்ந்து தீட்டிய ஓவியம்... காலைநேர காற்றலைகள் கூடி எழுதிய காவியம்... உலகின் அழகெல்லாம் நீயே அழகென கொண்டாடும், இளசுகளின் இதயங்களை உன் கண்கள் இரண்டும் இழுத்தே பந்தாடும்... என தமிழ் 'கலகத் தலைவன்' படத்தில் நடிப்பில் கலக்கிய நிதி அகர்வால் மனம் திறக்கிறார்....


* 'கலகத் தலைவன்' படம், சரளமான தமிழ் பேச்சு


'கலகத் தலைவன்' படத்தை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இப்போ தமிழ் நல்லா பேசத் தெரியும். சீக்கிரம் தமிழ் கத்துகிட்டேன். வசனங்களை மனப்பாடம் செய்து உடனே பேசிடுறேன்.


* 'கலகத் தலைவன்'ல் உங்கள் கேரக்டர் என்ன


'மைதிலி' கேரக்டரில் டாக்டராக நடிக்கிறேன். படத்தில் 'மை மை'ன்னு கூப்பிடுவாங்க, இந்த படம் அழகான காதல் பயணமாக இருக்கும். சின்ன மெசேஜ் இருக்கும் அது மக்களுக்கு புரியும், இருக்கை நுனியில் அமர்ந்து பார்ப்பாங்க. கஷ்டமான கதை இது.


* உதயநிதி, உங்களுக்கும் கெமிஸ்ட்ரி எப்படி


உதயநிதி அருமையான நடிகர்... ரெண்டு பேரின் கெமிஸ்ட்ரியை படத்தின் பாடல்களில் பார்க்கலாம். ரெண்டு பேருக்கும் பயங்கரமான சீன்ஸ் கூட இருக்கு.. மழை நேரத்தில் ஒரு கப் காபி குடிக்கும் பீல் வரும்... அனைத்து பாடல்களும் அந்த மூடுல வந்திருக்கு.


* நடித்த பின் எவ்வளவு திருப்தி இருந்தது


இயக்குனர் மகிழ், உதயநிதி படம் பார்த்த பின்னாடி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. மகிழ் படத்தில் அயிட்டம் சாங், தேவை இல்லாத காட்சிகள் இருக்காது.கதைக்கு தேவையான கட்சிதமான காட்சிகள் தான் இருக்கும்.


* ஐந்து ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து...


'ஈஸ்வரன்', 'பூமி' படங்கள் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. இப்போ தான் நிறைய தமிழ் படங்களில் நடிக்க துவங்கி இருக்கேன். வாய்ப்புகளும் வருது. ஹிந்தியில் ஆரம்பித்து, தெலுங்கு, தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கேன். இப்போ கூட தெலுங்கில் பவன் உடன் நடிக்கிறேன்.


* நடிக்க விரும்பும் நடிகர்கள், ரசித்த படம்


ரஜினி, கமல்... எனபெரிய லிஸ்ட் இருக்கு. 'லவ் டுடே' பார்த்தேன்; ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல பொழுதுபோக்கு படம். விளையாட்டு, காதல், வரலாறு, டான்ஸ் சம்பந்தப்பட்ட கதைகளில் நடிக்க தான் விரும்புறேன்.


* உங்களை பற்றி நெகட்டிவ் செய்திகள் வந்தால்


என்னை பற்றி நெகட்டிவ் செய்தி வந்தால் அம்மா, அப்பாவுக்கு தானே பதில் சொல்லணும்... இப்போ நான் அதை எல்லாம் பெருசா எடுத்துகிறதில்லை. என்னை பற்றி நான் செய்தி எதுவும் கொடுப்பதும் இல்லை.


* நிதி எப்படி ரொம்ப அமைதியான பொண்ணா


ஆமா... அமைதியான பொண்ணு தான்... பழகினால் கொஞ்சம் பிரியா பேசுவேன். வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு நானே காபி கொடுக்குறது என் பழக்கம்.


* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது


என்னை கொண்டாடும், என் நடிப்பை ரசிக்கும் என் ரசிகர்களுக்கு என் முத்தத்தை பரிசாக தருகிறேன். இதே போல் என் படங்களை தொடர்ந்து தியேட்டரில் பார்த்து பாராட்டுங்க.


நிதியின் கிளாமர் போட்டோ வைரல் ஆகுதே


போஸ் கொடுத்து மாடல் போல் நின்றால் கிளாமர்...சின்ன வயதில் இருந்து டிரஸ் கலர்ஸ், மாடல் பார்த்து தான் பயன்படுத்தி இருக்கேன். மற்றபடி கிளாமர்ன்னு எதுவும் சொல்ல தெரியலை. சமூக வலைதளங்கள் ரொம்ப பிடிக்கும். அதனால் அடிக்கடி போட்டோ போஸ்ட் பண்ணுவேன்.

கவி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X