சண்டிகர்: பஞ்சாபில், சர்வதேச எல்லையருகே, பாக்.,கில் இருந்து வந்த இரண்டு ட்ரோன்கள் மீது எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வீரர்கள் சராமரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அந்த ட்ரோன்கள் திரும்பி சென்றன.
பஞ்சாபில், இந்திய சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கசோவல் பகுதியில் நேற்று பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று தென்பட்டது. இதனை பார்த்த பிஎஸ்எப் வீரர்கள் அந்த ட்ரோன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 96 முறை சுட்டதுடன், வெடிகுண்டுகளை வீசினர். இதனால், ட்ரோன் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல், அமிர்தசரஸ் மாவட்டம், சன்ன படான் பகுதியில் நேற்று இரவு 11:46 மணியவில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் வந்தது. அதனை பார்த்த பிஎஸ்எப் வீரர்கள் 10 முறை துப்பாக்கியால் சுட்டதும் அது திரும்பி சென்றது. அந்த பகுதியிலும் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டு, சோதனையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.