புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் தீவன விலை உயர்வு பருவமழை பொய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரே ஆண்டில் நான்காவது முறையாக பால் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தனியார் பால் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது: தலைநகர் புதுடில்லியல் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி தனியார் நிறுவனம் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் வரையில் விநியோகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தாண்டு மட்டும் நான்காவது முறையாக விலையை அதிகரித்து உள்ளது. இதன்படி லிட்டர் ஒன்றிற்கு ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரையில் பால் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புல்கிரீம் வகை பால் லிட்டர் ரூ.63-ல் இருந்து 64 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே போல் டோக்கன் பால் லிட்டர் ஒன்றிற்கு ரூ.48 ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அரை லிட்டர் அளவு கொண்ட பால் பாக்கெட்டுகளின் விலையில் மாற்றம் எதுவும்செய்யப்படவில்லை,.
இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் தீவனத்தின் விலை அதிகரிப்பு, பருவமழை பொய்ப்பு,. கச்சா பால் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பண்டிகை காலத்திற்கு பி்ன்னர் தேவை மற்றும் விநியோகத்தில் நிலவி வரும் பொருத்த மற்ற நிலை காரணமாகவும் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு சில வகை பால்பாக்கெட்டுகளில் விலையை உயர்த்தியதன் மூலம் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.
![]()
|
இதனிடையே விரைவில் டில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது விலையேற்றப்பட்டு உள்ள பால் விலை உயர்வு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தகூடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளானர்