தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்னோடியாக... மீண்டும் குண்டுவெடிப்பு!:பயணி போல ஏறி வெடிக்கச் செய்தவர் குறித்து 'திடுக்!'

Updated : நவ 22, 2022 | Added : நவ 20, 2022 | கருத்துகள் (56+ 101) | |
Advertisement
மங்களூரு:தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்னோடியாக, தமிழகத்தின் கோவையில் நடந்தது போல, கர்நாடகாவின் மங்களூரில் ஆட்டோவில், 'குக்கர் குண்டு' வெடித்துள்ளது. பயணி போல குக்கர் குண்டு எடுத்து வந்து வெடிக்கச் செய்தவர், தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வந்தவர். இவருக்கு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புஇருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மைசூரில் இருவர்
குண்டுவெடிப்பு

மங்களூரு:தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்னோடியாக, தமிழகத்தின் கோவையில் நடந்தது போல, கர்நாடகாவின் மங்களூரில் ஆட்டோவில், 'குக்கர் குண்டு' வெடித்துள்ளது. பயணி போல குக்கர் குண்டு எடுத்து வந்து வெடிக்கச் செய்தவர், தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வந்தவர். இவருக்கு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புஇருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மைசூரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மைதலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

முதல்வர் பொம்மை, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று முன்தினம், சுதந்திர போராட்ட வீரர் சமரவீரா கெதம்பவாடி ராமையா கவுடரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். விழா முடிந்து, மாலை 3:30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார்.


கரும்புகை


சிறிது நேரத்துக்கு பின், மங்களூரின் கங்கனாடி ரயில் நிலையத்தில் இருந்து வந்த ஒரு ஆட்டோவில், நாகுரி என்ற இடத்தில் ஒரு வாலிபர் ஏறி, பம்ப்வெல் என்ற பகுதிக்கு செல்லும்படி கூறினார். ஆட்டோ புறப்பட்டு, பம்ப்வெல் பகுதியை மாலை 4:30 மணிக்கு நெருங்கியது.

அப்போது, ஆட்டோவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

அப்பகுதியில் என்ன நடந்தது எனத் தெரியாமல், பலரும் பதற்றமடைந்தனர். அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. ஆட்டோவில் இருந்த 'காஸ்' கசிந்து வெடித்திருக்கலாம் என பலரும் கருதினர்.

ஆட்டோவில் பயணித்த மர்ம நபர், படுகாயத்துடன் கிடந்தார். அருகில் வெடித்த நிலையில் குக்கர் காணப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், 38, என்பவரும் படுகாயத்துடன் காணப்பட்டார்; இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


வெடிகுண்டு பயிற்சி


மர்ம நபர் கொண்டு வந்த பையில் இருந்து வெடி வெடித்ததாக, முதலில் ஆட்டோ ஓட்டுனர் கூறினார். போலீசார் தொடர் விசாரணையில், மர்ம நபர் வைத்திருந்த குக்கர் வெடித்தது தெரியவந்தது.

ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஷிவமொகாவைச் சேர்ந்த முகமது ஷாரிக், 27, என்பதும் தெரிந்தது.

இவர், சில மாதங்களுக்கு முன், துங்கா ஆற்றங்கரையில் வெடிகுண்டு வெடிக்க வைப்பது குறித்த பயிற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்.

இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஷாரிக், தலைமறைவாக இருந்துள்ளார்.

மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

வெடித்த நிலையில் குக்கர் மீட்கப்பட்டது. அதில் இரண்டு பேட்டரிகளுடன் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்தன.

ஆணிகள், இரும்பு துகள்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர் புறப்பட்ட இடத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் சம்பவம்நடந்து உள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் பிரசித்தி பெற்ற மஹாலிங்கேஸ்வர் கோவில் அமைந்துள்ளது.

இது தவிர பள்ளிகள், கோவில்கள், ஹிந்துகள் அதிகம் வசிக்கும் வீடுகள் என, எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆட்டோவில் வந்த மர்ம நபரிடம் இருந்த ஆதார் அடையாள அட்டையில், ஹூப்பள்ளியை சேர்ந்த பிரேம்ராஜ் ஹுடகி என்ற பெயர் இருந்தது.

அவரை தொடர்பு கொண்ட போது, அவர் துமகூரில் ரயில்வே கேங்க்மேனாக பணியாற்றி வருவது தெரிந்தது.

அவர், 'என் ஆதார் அட்டை தொலைந்து போனது; சம்பவம் குறித்து எதுவும் தெரியாது' எனக் கூறினார்.

விசாரணையில் ஷாரிக் அளித்த தகவலின்படி, மைசூரு லோக்நாயக் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர்கள், ஷாரிக்குக்கு 10 மொபைல் போன்கள் வாங்கி கொடுத்ததை ஒப்புக் கொண்டனர்.

மங்களூரு எப்போதும் பதற்றமான நகரம். கேரள எல்லை அருகிலேயே இருப்பதால், மங்களூரில் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியதுஅம்பலமாகியுள்ளது.

முதல்வர் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் குக்கர் வெடிகுண்டு வெடித்து உள்ளது.

இதன் மூலம் முதல்வரை கொல்ல சதி நடந்ததா; மஹாலிங்கேஸ்வர் கோவிலை தகர்க்க திட்டமிட்டனரா என்ற கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.


கோவை ஆசிரியர் கைது


தமிழகத்தின் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, பலியானார்.

விசாரித்த போலீசார், முபீன் உடன் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்தனர். நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை என்.ஐ.ஏ., தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கும், கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கும் ஒற்றுமை இருப்பதை அறிந்து, கர்நாடக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

முகமது ஷாரிக், ஐ.எஸ்., ஆதரவு செயல்பாடு காரணமாக, 2017 முதல் என்.ஐ.ஏ.,வால் தேடப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அவர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக கோவை வந்திருந்ததாகவும், சிங்காநல்லுாரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் பயன்படுத்திய மொபைல் போன் சிம் கார்டு, சுரேந்திரன், 28, என்பவர் பெயரில் கோவையில் வாங்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மங்களூரு போலீசார், தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், கோவை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஊட்டியைச் சேர்ந்த சுரேந்திரனை கோவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவருக்கும், முகமது ஷாரிக்கிற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடக்கிறது.

முகமது ஷாரிக் மற்றும் ஜமேஷா முபின் இடையே தொடர்புகள் இருந்துள்ளதா, இருவரும் தனித்தனியாக செயல்பட்டனரா என்ற கோணங்களிலும் விசாரணை தீவிரமாகிஉள்ளது.


தீவிர விசாரணை


பயங்கரவாத செயல் என்பதால் விசாரணையைதீவிரப்படுத்தியுள்ளோம். தேசிய புலனாய்வுஅமைப்பினர், கர்நாடக போலீசார் இணைந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக ஞானேந்திரா, கர்நாடக உள்துறை அமைச்சர், பா.ஜ.,

பயங்கரவாத செயல்: டி.ஜி.பி., உறுதி

கர்நாடக மாநில டி.ஜி.பி., பிரவீன் சூட் கூறுகையில், ''குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத செயல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, கர்நாடக மாநில போலீசாரும், மத்திய விசாரணை அமைப்பினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என்றார்.


10 தனிப்படைகள் அமைப்பு


மங்களூரு பாதர் முல்லர்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக், ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் ஆகியோர் உடல்நிலை குறித்து, நேற்று மாலை மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார் ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், ''இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுனருக்கு தொடர்பு இல்லை. பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்படுகிறது. தேசிய புலனாய்வு அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும்,'' என்றார்.

இதற்கிடையில், கர்நாடக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார், நேற்று மாலை பெங்களூரில் இருந்து மங்களூரு புறப்பட்டு சென்றார். மங்களூரை இணைக்கும் அனைத்து எல்லை பகுதிகளையும் உஷார்படுத்தும்படி போலீசாருக்குஉத்தரவிட்டார்.


தமிழகம் முழுதும் போலீசார் உஷார்


கோவை, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்கள், தமிழகம் உட்பட தென் மாநிலங்களுக்கு பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதை அம்பலப்படுத்துகிறது. இதையடுத்து, தமிழகம் முழுதும் பாதுகாப்பை பலப்படுத்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் நேரடி கண்காணிப்பில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலம் முழுதும் தீவிர வாகன சோதனை நடக்கிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிக்கின்றனர். பஸ், ரயில், விமான நிலையங்கள் என, முக்கியமான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


என்னென்ன பொருட்கள்?


குக்கர் குண்டு வெடித்த ஆட்டோவில் சுவிட்ச் போர்டு, சிறிய போல்டுகள், இரண்டு பேட்டரிகள், மரத்துகள்கள், அலுமினியம், மல்டிமீட்டர், ஒயர்கள், மிக்சி ஜார்கள், ஆணிகள் என வெடிகுண்டு வெடிக்க பயன்படுத்தும் பொருட்கள் இருந்தன.


கோவையில் சுற்றிய ஷாரிக்


கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

இது ஒரு பயங்கரவாத சம்பவம் என்பது முதற்கட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பினர் ஏற்கனவே சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர்.

ஷாரிக், தமிழகத்தின் கோவை உட்பட பல பகுதிகளுக்கு சென்று வந்ததும்,பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புஇருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.எப்.ஐ., உட்பட வேறு ஏதாவது அமைப்பினருக்கும், இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதாஎன்பது விசாரணைக்கு பின் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.தப்ப முயன்ற பி.எப்.ஐ., தலைவர் ஏர்போர்ட்டில் சுற்றிவளைப்பு


இந்தியாவில் பிரிவினைவாதத்தை துாண்டுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பி.எப்.ஐ., அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, கர்நாடகாவில் 100க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிலர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளனர். இவர்கள் யாரும் வெளிநாடு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நிபந்தனையை மீறி ஜாமினில் வெளிவந்த தலைவர் ஒருவர், நேற்று மங்களூரு விமான நிலையம் வாயிலாக துபாய் தப்பிச் செல்ல முயன்றார்.

இது குறித்து, தகவல் அறிந்த என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர், அவரை மங்களூரு விமான நிலையத்திலேயே சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (56+ 101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Dindigul,இந்தியா
24-நவ-202201:33:13 IST Report Abuse
Karthik உண்மையான பெயரைத் தெரிவிக்க தைரியம் இல்லாத பயந்தாகொள்ளிகள், மத்திய அரசின் நடவடிக்கையை குறைகூறுகிறது.
Rate this:
Cancel
zxcz - chennai,இந்தியா
21-நவ-202221:34:03 IST Report Abuse
zxcz எதுவுமே இல்லாத மோடி பதவி விலக நினைப்பது ?
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
21-நவ-202223:21:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும்எதுவுமே இல்லாத மோடி பதவி விலக நினைப்பது ?...// இம்ரான் அடிமையே மூடிட்டு போ ...
Rate this:
Cancel
zxcz - chennai,இந்தியா
21-நவ-202221:33:33 IST Report Abuse
zxcz NIA வும், மோடி குமபாலும் மாதக்கணக்கில் இங்கு மோப்பம் விட்டுகொன்டு இருக்கும்போதே இப்படி ஒன்று
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
21-நவ-202223:21:12 IST Report Abuse
வாய்மையே வெல்லும்நீ சவுதியில் இருந்து இப்படி பினாத்தினாக்க நடுரோட்டில் ரங்கராட்டினம் ஆட வைத்துவிடுவார்கல்... உன்னோட ஆட்டமெல்லாம் இந்தியாவில் தான் நடக்கும்.. மண்டை பத்திரம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X