வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--'ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்து விட்ட தமிழனை வீழ்த்த முடியாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
![]()
|
சமூகநீதி கட்சி துவங்கப்பட்ட நாளை முன்னிட்டு, அவரது சமூக வலைதள பதிவு:
ஜாதியின் பெயரால் கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு, இட ஒதுக்கீட்டை ஒதுக்கியே தீர்வது என்ற, நம் நெடும் பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட நாள் இது. இந்த நாளில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதி ஏற்போம்.
![]()
|
தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, நீதிகட்சி உருவாக்கிய பாதை வரலாறு காட்டும் வெளிச்சம். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement