சென்னை: சென்னைவடபழநி ஆண்டவர் கோயிலில் தங்க தேர் புதுப்பிக்கப்பட்டு தேர் பவனி மீண்டும் துவக்கப்பட்டது. மேலும்கோயில் தல வரலாறு பாடல்கள் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
அமைச்சர் சேகர்பாபு தேர் பவனியை துவக்கினார்.அவருடன்வடபழநி ஆண்டவர் கோயில் தக்கார் எல்.ஆதிமூலம்,தி.மு.க.,எம்.எல்.ஏ.,வேலு,அறநிலையத் துறை இணை கமிஷனர் தனபாலன்,துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வந்தனர்.
பின் அமைச்சர் கூறியதாவது:2021- - 22ம் நிதியாண்டில் புதிய தேர்கள் உருவாக்கவும் பழைய தேர்களை சீரமைக்கவும்ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிதியாண்டில் 9 புதிய தேர்கள் செய்யவும்4பழைய தேர்கள் பழுது நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்காகவும் காசி யாத்திரைக்காகவும்ரூ.50 லட்சத்தைஅரசு ஒதுக்கியுள்ளது.
கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடபழநி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் பவனி நடக்கவில்லை. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தேர் புதுப்பிக்கும் பணி முடிந்து தேர் பவனி மீண்டும்துவக்கப்பட்டுள்ளது என்றார்.