விக்கிரவாண்டி அருகே மாடு திருடிய 2 பேர் கைது

Added : நவ 21, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பசு மாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையைச் சேர்ந்தவர் நாராயணன், 59; விவசாயி. இவர் தனது 7 பசு மாடுகளை நிலத்தில் உள்ள வீட்டில் கட்டி வைத்து வளர்த்து வருகிறார்.கடந்த 19ம் தேதி இரவு 9:30 மணியளவில் பார்த்த போது ஒரு பசு மாட்டை காணவில்லை. பசுவை தேடியபோது, அவரது நிலத்தின் அருகே உள்ள
 விக்கிரவாண்டி அருகே மாடு திருடிய 2 பேர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பசு மாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையைச் சேர்ந்தவர் நாராயணன், 59; விவசாயி. இவர் தனது 7 பசு மாடுகளை நிலத்தில் உள்ள வீட்டில் கட்டி வைத்து வளர்த்து வருகிறார்.

கடந்த 19ம் தேதி இரவு 9:30 மணியளவில் பார்த்த போது ஒரு பசு மாட்டை காணவில்லை. பசுவை தேடியபோது, அவரது நிலத்தின் அருகே உள்ள காட்டின் நடுவே 2 பேர் மாட்டை வெட்டி துண்டுகளாக்கிக் கொண்டிருந்தனர்.நாராயணனைப் பார்த்ததும் இருவரும் அப்படியே போட்டு விட்டு, மொபட்டில் தப்பிச் சென்றனர்.

நாராயணன் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், நேமூரைச் சேர்ந்த துரை, 41; செஞ்சிஅடுத்த அம்மாகுளத்தைச் சேர்ந்த சுரேஷ், 38; ஆகிய இருவரும் மாட்டை திருடி, வெட்டி கூறு போட்டது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X