மரக்காணம், செஞ்சி அருகே கஞ்சா கடத்திய 5 பேர் கைது

Added : நவ 21, 2022 | |
Advertisement
செஞ்சி : செஞ்சி மற்றும் மரக்காணம் அருகே கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் செஞ்சியில், திருவண்ணாமலை சாலையில் 'பி' ஏரி அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்போது பைக்கில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்தியதும், அதிலிருந்த ஒருவர்
 மரக்காணம், செஞ்சி அருகே கஞ்சா கடத்திய 5 பேர் கைது

செஞ்சி : செஞ்சி மற்றும் மரக்காணம் அருகே கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் செஞ்சியில், திருவண்ணாமலை சாலையில் 'பி' ஏரி அருகே வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பைக்கில் வந்த 4 பேரை போலீசார் நிறுத்தியதும், அதிலிருந்த ஒருவர் தப்பியோடினார்.

மற்றவர்களிடம் சோதனை நடத்தியதில் அவர்கள் 3 கிலோ 800 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் சென்னை வில்லிவாக்கம் முனுசாமி மகன் விக்கி என்கிற விக்னேஷ், 24; பழனி மகன் சக்திவேல், 20; செஞ்சி அடுத்த கொணலுார் ரவி மகன் நித்தீஷ் குமார், 21; என்பதும், கஞ்சா கடத்தலில் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன், 19; என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷ், சக்திவேல், நித்தீஷ்குமார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக், 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றினர். தப்பியோடிய கண்ணன் மகன் திவாகர், 20; என்பவரை தேடி வருகின்றனர்.

மரக்காணம்: மரக்காணம் அருகே உள்ள ஆத்துார் ஏரிகரையில் கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்.பி., ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பிரம்மதேசம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஆத்துார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது ஏரிகரை அருகே வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில், 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், திண்டிவனம் அடுத்த ஓமந்துார் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி என தெரிய வந்தது. உடன் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X