'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., வழக்கு: திரிபாதி நேரில் ஆஜராக உத்தரவு

Added : நவ 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி., திரிபாதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல்
 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., வழக்கு: திரிபாதி நேரில் ஆஜராக உத்தரவு

விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி., திரிபாதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

அரசு தரப்பு சாட்சியான, தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சீமா அகர்வால், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார்.

சீமா அகர்வாலிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் முன்னாள் எஸ்.பி., ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்கள் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்தனர்.

அரசு சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை விபரங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கு விசாரணையை வரும், 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அன்று, அரசு தரப்பு சாட்சியாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., திரிபாதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
22-நவ-202203:33:57 IST Report Abuse
John Miller பாலியல் தொந்தரவு செய்தது பின்னால் கொழுப்பு எடுத்தா பீலாவின் புருஷன். இதில் திரிபாதி, கவர்னர் ரவி, ஜனாதிபதி மரமு, மோடி, அமித் ஷா என வீ இ பி என எல்லோரும் ஆஜர் ஆக வேண்டுமா? விட்டால் அமெரிக்கா ஜனாதிபதி பைடேனையும் கூப்பிடுவார்கள் போல இருக்கின்றது. சீக்கிரம் வழக்கு முடித்து அவனை ஜெயிலில் தள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X