108 ஆம்புலன்சில் பணி; 24ம் தேதி நேர்முக தேர்வு

Added : நவ 21, 2022 | |
Advertisement
விழுப்புரம் : ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு வரும் 24ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் அறிக்கை;108 அவசரகால ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 24ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் வேலைவாய்ப்பு

விழுப்புரம் : ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு வரும் 24ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் அறிக்கை;

108 அவசரகால ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 24ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண் பெண் பங்கேற்கலாம். பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.எம்.எல்.டி., (பிளஸ் 2 விற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி., உயிரியியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி) படித்தவர்கள் பங்கேற்கலாம்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு 15 ஆயிரத்து 435 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இரு பாலாருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பேட்ஜ் உரிமம் எடுத்து இரண்டு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 15 ஆயிரத்து 235 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X