மேல்மலையனூர் அமாவாசை திருவிழா- கலெக்டர் தலைமையில் ஆலோசனை

Added : நவ 21, 2022 | |
Advertisement
விழுப்புரம் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில்,

விழுப்புரம் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.

எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை 23ம் தேதி அமாவாசை திருவிழாவும், அடுத்த மாதம் 7ம் தேதி திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், பவுர்ணமி ஜோதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறைகள், தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவல்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மின்துறை தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X