மயில்களை விரட்ட எளிய வழி

Added : நவ 21, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் விளைநிலங்களில் பயிர்களுக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மயில்களை எளிதாக விரட்ட முன்னோடி விவசாயிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம் வட்டாரங்களில் விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை தக்காளி, வெண்டை மற்றும் பல்வேறு காய்கறிகள் விளையும் பருவத்தில்,

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் விளைநிலங்களில் பயிர்களுக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மயில்களை எளிதாக விரட்ட முன்னோடி விவசாயிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம் வட்டாரங்களில் விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை தக்காளி, வெண்டை மற்றும் பல்வேறு காய்கறிகள் விளையும் பருவத்தில், அதன் பூக்களை கொத்தி தின்பது வாடிக்கையாக உள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனத்துறை சட்டப்படி மயில்கள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் இருப்பதால், அவற்றை விரட்டவும், தடுக்கவும் முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், விளை நிலங்களுக்குள் மயில்கள் வராமல் தடுக்க, எளிய வழிமுறைகள் குறித்து முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி,'நல்ல வாசம் வரும் கருவாட்டை சுமார் கால் கிலோ எடுத்து, மிக்ஸியில் நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். கோழி முட்டை மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையில் உடைத்து, கருவாட்டு பொடியுடன் கலந்து விட்டு, காற்றுப்புகா 'டப்பா'வில் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பின், இந்த கலவையை மணலில் கலந்து மயில்கள் எங்கு நடமாட்டம் உள்ளதோ, அங்கு துாவி விட வேண்டும். கலவையின் நாற்றம் மிக அதிகமாக இருக்கும். இந்த வாசத்துக்கு மயில்கள் அப்பகுதிக்குள் வராது. இந்த முறையை தொடர்ந்து வாரத்துக்கு ஒருமுறை தொடர்ச்சியாக செய்து வர, மயில்களிடமிருந்து பயிர்களை எளிதாக காப்பாற்றி கொள்ளலாம். கருவாட்டை துாளாக அரைப்பதற்கு காரணம், அவை முழுமையாக இருந்தால் நாய் அல்லது எலி துாக்கிக்கொண்டு ஓடிவிடும். அதனால் பொடி செய்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்' என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X