வீடு புகுந்து தாக்குதல் சம்பவம்: 4 பேர் கைது

Added : நவ 21, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீடு புகுந்து, தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், பூந்தோட்டம் குமரவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜி என்கிற விஜயகுமார். சில நாட்களுக்கு முன்பு இவருடைய மொபைல் போன் கடை முன்புள்ள பெயர் பலகையில் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், 30; தரப்பினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இதனால் ஏற்பட்ட

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீடு புகுந்து, தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், பூந்தோட்டம் குமரவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜி என்கிற விஜயகுமார். சில நாட்களுக்கு முன்பு இவருடைய மொபைல் போன் கடை முன்புள்ள பெயர் பலகையில் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், 30; தரப்பினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அன்பரசன் துாண்டுதலின் பேரில், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த அவரது சகோதரர் கலையரசன், வெங்கட், சிவக்குமார், மணி மகன் அன்பரசன், சிலம்பரசன், சஞ்சய், மின்னல் தினேஷ், கவுதம், பிரசாந்த், டோனி, அமீர், ஆதவன், கிருபாகரன், அங்கம்மா, பாலாஜி ஆகிய 14 பேர் சேர்ந்து விஜயகுமாரின் மகன் சந்திரமோகனை தாக்கினர். மேலும், அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகளை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து விஜயகுமாரின் மனைவி ராஜேஸ்வரி, அளித்த புகாரின் பேரில் கலையரசன் உட்பட 14 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து, சிவக்குமார், அன்பரசன், சஞ்சய், கவுதம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X