கடன் பிரச்னையால் பெண் வி.ஏ.ஓ., தற்கொலை

Added : நவ 21, 2022 | |
Advertisement
திருச்சி : மன உளைச்சல் காரணமாக, பெண் வி.ஏ.ஓ., ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி, 39; மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்த அவர், திருச்சி மாவட்டம், தாதனுாரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தார்.நேற்று காலை, அவர் பணிக்கு செல்லாததால், சக பணியாளர்கள், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.

திருச்சி : மன உளைச்சல் காரணமாக, பெண் வி.ஏ.ஓ., ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி, 39; மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்த அவர், திருச்சி மாவட்டம், தாதனுாரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை, அவர் பணிக்கு செல்லாததால், சக பணியாளர்கள், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். போனை எடுக்காததால், சந்தேகமடைந்த அவர்கள், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, சுவாதி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

மணப்பாறை போலீசார், கதவை உடைத்து சுவாதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். சுவாதி எழுதி வைத்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், அதிக அளவில் கடன் வாங்கியதால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X