தி.நகர் - அண்ணா சாலை மேம்பால பணி 'ஜரூர்' முதற்கட்டமாக 33 இடங்களில் மண் பரிசோதனை

Added : நவ 21, 2022 | |
Advertisement
தி.நகர் தி.நகர் முதல் அண்ணா சாலை வரை, 131 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள மேம்பாலத்திற்கான ஆரம்பக்கட்ட பணியாக, 33 இடங்களில் மண் பரிசோதனை நடக்கிறது.சென்னை மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை, ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் அமைக்க அரசு முடிவு
 தி.நகர் - அண்ணா சாலை மேம்பால பணி 'ஜரூர்' முதற்கட்டமாக 33 இடங்களில் மண் பரிசோதனை

தி.நகர் தி.நகர் முதல் அண்ணா சாலை வரை, 131 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள மேம்பாலத்திற்கான ஆரம்பக்கட்ட பணியாக, 33 இடங்களில் மண் பரிசோதனை நடக்கிறது.

சென்னை மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை, ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து, 2021 -- 22 சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதில், ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் பணிகளால் தடைபட்டது.

தற்போது, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தி.நகர், உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, புது மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு, ஆரம்பகட்ட பணிகள் நடக்கின்றன.


ரூ.131 கோடி



இதில், சென்னையின் வர்த்தக மையமான தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.

இதில், தி.நகர் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, மேம்பாலத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் இறங்கவும், அதற்கு எதிர் திசையில் மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் ஏறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மேம்பால பணிகளுக்கான இடத்தை, 'சர்வே' செய்து, திட்டமதிப்பீடு தயாரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த மேம்பால பணிக்கு, 131 கோடி ரூபாய் வரை செலவாகும் என, மதிப்பிடப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மேம்பாலம், 55 துாண்களுடன் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதையாக அமைய உள்ளது. இந்த மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தி.நகர் உஸ்மான் சாலையில், 33 இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடக்கின்றன.

இது குறித்து மாநகராட்சி மேம்பாலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தெற்கு உஸ்மான் சாலையில் அமைய உள்ள மேம்பாலத்தால், தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இப்பணிகள் துவங்கி, 24 மாதங்களில் மேம்பாலத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேம்பால துாண்கள் அமைப்பதற்கான 'பைலிங்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரம் மேம்பால பணிகள் துவக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

நடை மேம்பாலம்

தி.நகர் பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தெருக்களில், எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். இப்பகுதிகளில் நெருக்கடியை தவிர்க்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கடந்த 2019ல் 30 கோடி ரூபாய் செலவில் 4 மீட்டர் அகலம், 600 மீட்டர் நீளத்தில் நடை மேம்பால கட்டுமான பணி துவங்கியது.'கொரோனா' ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்ட பணி, மீண்டும் துவக்கப்பட்டு தற்போது, இரும்பு கூரை அமைக்கும் பணி மற்றும் தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, நடை மேம்பாலத்தில் மக்கள் ஏற ஏதுவாக படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இது குறித்து, மாநகராட்சி மேம்பாலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மழையின் காரணமாக பணிகளில் சற்று பின்தங்கியுள்ளன. தி.நகரில் போக்குவரத்து ஓய்ந்த பின், அதிகாலை 4:00 மணி வரை மட்டுமே, 'கிரேன்' வாயிலாக பணிகள் செய்ய முடிகிறது. அதிகாலையில் மாம்பலம் சந்தை துவங்குவதால், அதற்கு பின் பணிகள் தொடர முடியவில்லை. நடைமேம்பால பணிகள் விரைவில் முடிந்து, ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுள்ளது,'' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X