விதிமீறி கடன் வழங்கிய 9 பேர் தகுதி நீக்கம்

Added : நவ 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வேலுார் : வேலுாரில், விதிமீறி கடன் வழங்கிய கூட்டுறவு சங்க தலைவர் உட்பட ஒன்பது பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.வேலுார், அண்ணாசாலையில், வேலுார்கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. சங்க தலைவராக நாகு, 65, மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நீலமேகம், 50, சதாசிவம், 45, உட்பட எட்டு பேர் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.,வைச்

வேலுார் : வேலுாரில், விதிமீறி கடன் வழங்கிய கூட்டுறவு சங்க தலைவர் உட்பட ஒன்பது பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வேலுார், அண்ணாசாலையில், வேலுார்கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. சங்க தலைவராக நாகு, 65, மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நீலமேகம், 50, சதாசிவம், 45, உட்பட எட்டு பேர் நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். இச்சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கடன் தொகை, 60 லட்சம் ரூபாய். இந்த தொகை ஓராண்டாக வசூலாகாமல் இருந்தது; கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், சங்க தலைவர் நாகு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விதிமீறி அவர்களது உறவினர்களுக்கு கடன் வழங்கியதும், அதனால் அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரிந்தது.

இதையடுத்து, நாகு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை தகுதி நீக்கம் செய்து, வேலுார் மாவட்ட கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அருட்பெருஞ்சோதி நேற்று உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
22-நவ-202203:29:54 IST Report Abuse
John Miller திருடர்களை கைது செய்ய போலீசிற்கு பயம் ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X