அரிதான தன்னுடல் தாக்கு நோய் பெண்ணுக்கு 'காவேரி'யில் சிகிச்சை

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை அரிதான, தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் மற்றும் இதய செயலிழப்பு நிலைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு உயர் சிகிச்சைகளை அளித்து, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இது குறித்து, காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன், காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு 33 வயதான இளம்பெண்,



சென்னை அரிதான, தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் மற்றும் இதய செயலிழப்பு நிலைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு உயர் சிகிச்சைகளை அளித்து, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இது குறித்து, காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன், காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு 33 வயதான இளம்பெண், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், 'ஏன்ட்டிபால்போலிமிட் சிண்ட்ரோம்' என்ற தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இந்நோய், ஒருவரது எதிர்ப்பாற்றலே, அவரது உடலுக்கு எதிராக செயல்பட்டு நாளங்களில் ரத்தத்தை உறைய வைக்கும் பாதிப்பாகும்.

அதன்படி, பெண்ணுக்கு நுரையீரல் நாளங்களில் ரத்தம் உறைந்து, கட்டி உருவானது தெரிய வந்தது.

இதன் காரணமாக, அவருக்கு நுரையீரல் மற்றும் இதயம் செயலிழக்கும் சூழல் உருவானது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களும் செயல்திறனை இழந்தன.

தொடர்ந்து, அவரது இதயத்தை 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மருத்துவ ரீதியாக நிறுத்தி வைத்து, அத்தருணத்தில் ரத்த உறைவு கட்டியையும், அது படிந்திருந்த தமனியின் உட்புற ஜவ்வையும் அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆறு மணி நேரத்துக்கும் மேலாக, காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா, குமுத் குமார் திட்டல் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மிக கவனமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

அதன் பயனாக, இளம்பெண் தற்போது அப்பிரச்னையிலிருந்து மீண்டுள்ளார்.

ரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் நிலையில், வரும் காலங்களில் அவருக்கு கருத்தரித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இயல்பாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X