பஸ்களை மோத விட்டு 'அட்ராசிட்டி': தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு

Added : நவ 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
தஞ்சாவூர் : பஸ்களை இயக்குவதில் ஏற்பட்ட நேர பிரச்னையால், இரண்டு தனியார் பஸ்கள், ஒன்றோடு ஒன்று மோதிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பஸ்களை விட, தனியார் பஸ்கள் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.அதனால், பஸ்களை அதிக வேகத்தில் தாறுமாறாக ஓட்டி, அவ்வப்போது விபத்துகள்
 பஸ்களை மோத விட்டு 'அட்ராசிட்டி': தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு

தஞ்சாவூர் : பஸ்களை இயக்குவதில் ஏற்பட்ட நேர பிரச்னையால், இரண்டு தனியார் பஸ்கள், ஒன்றோடு ஒன்று மோதிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பஸ்களை விட, தனியார் பஸ்கள் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

அதனால், பஸ்களை அதிக வேகத்தில் தாறுமாறாக ஓட்டி, அவ்வப்போது விபத்துகள் ஏற்படுத்துகின்றனர். தற்போது, தனியார் பஸ் டிரைவர்கள், பஸ்களை வேண்டுமென்றே மோதி, 'அட்ராசிட்டி' செய்து வருகின்றனர்.

நேற்று காலை, பி.எல்.ஏ., மற்றும் வி.பி.ஆர்., தனியார் பஸ்கள் பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட போதே, நேர பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இரண்டு பஸ்களும் போட்டி போட்டு தஞ்சாவூருக்கு சென்ற போது, பட்டுக்கோட்டை நகர பகுதியிலேயே, வி.பி.ஆர்., பஸ்சை, பி.எல்.ஏ., பஸ் டிரைவர் சாலை ஓரத்துக்கு ஒதுக்கி உள்ளார்.

இதையடுத்து, இரண்டு டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின், பயணியர் சமாதானப்படுத்தியதால், இரண்டு பஸ்களும் புறப்பட்டன.

பின், தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்ற பின், வி.பி.ஆர்., பஸ்சுக்கு பின்னால், பி.எல்.ஏ., பஸ் நின்றுள்ளது. அப்போது, முன்னால் நின்ற பஸ் டிரைவர், பஸ்சை பின்நோக்கி நகர்த்தி, பி.எல்.ஏ., பஸ் மீது மோதினார்.

இதில், இரண்டு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பஸ்களில் பயணியர் யாரும் இல்லாததால், எந்த சேதமும் ஏற்படவில்லை. நேர பிரச்னையால் பஸ்களை மோத விட்ட சம்பவத்தை பார்த்து, அங்கிருந்த பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு பஸ்களும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என்பதால், ஆர்.டி.ஓ.,வும், போலீசாரும் வழக்குப் பதிவு செய்யாமல், பேச்சு நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் இடையே தனியார் பஸ்களின் அட்ராசிட்டிகளுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, பயணியரின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
27-நவ-202216:54:47 IST Report Abuse
M  Ramachandran அரசியல் வாதிகலால் மக்களுக்கு அன்றாடம் பிரச்சன்னைகள்..
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
25-நவ-202207:15:44 IST Report Abuse
sridhar இப்படி எந்த பிரச்சினை பற்றியும் கவலை இல்லாமல் கல்லா கட்டுவதில் மட்டும் குறியாய் ஒரு அரசு, தெரிந்தும் அதற்கு வாக்களித்த மக்கள் .
Rate this:
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-202211:07:59 IST Report Abuse
johnஇது அதிமுக ஆட்சியில் இருந்தே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது , கொஞ்சம் தஞ்சாவூர் , திருச்சி எல்லாம் ஒருமுறை போய் பாருங்கள்....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-நவ-202222:16:10 IST Report Abuse
g.s,rajan தனியார் பேருந்துகள் எல்லாம் வசூலுக்காக பேய்வேகத்தில் ஒட்டப்படுகின்றன.ஆனால் சில சமயங்களில் உருட்டு உருட்டென்று உருட்டிச் செல்வார்கள்.ஆனால் பேருந்துகள் எல்லாம் பொதுவாக புதிதாக பளபளப்பாக இருக்கும் .மேலும் சீட்டுக்கள் போதுமான அகலம் இன்றி இருக்கும் .மூவர் அமரும் சீட்டுக்களும் ,இருவர் அமரும் சீட்டுக்களும் மிகவும் குறுகலாக இருக்கும் .கால்களை நீட்டி நிம்மதியாக உட்காரமுடியாது ,ஆனால் பேருந்தின் நடுவில் நிற்க நல்ல இடம் இருக்கும் .இதனால் புளிமூட்டையைப் போல பயணிகளை அடைத்துக்கொண்டு செல்வார்கள் ,ஒரு பேருந்தில் இரண்டு பேருந்துக்கான டிக்கெட்டுகளை ஏற்றி அநியாயம் செய்வார்கள் .போதாக்குறைக்கு எல்லா நிறுத்தங்களில் டவுன் பஸ் போல பயணிகளை ஏற்றிச் செல்வார்கள் .பல இடங்களில் நின்று செல்வதால் பயண நேரம் குறைந்து விடும் இதனால் காட்டுத்தனமாக ஒட்டிச் செல்வார்கள் .இது பெரும்பாலும் தமிழகம் எங்கும் நித்தம் நடக்கும் காட்சி . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X