'மிஸ்டர் சென்னை' ஆணழகன்: வடபழநி வீரர் சாம்பியன்

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை :தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், 'மிஸ்டர் சென்னை - 2022'க்கான ஆணழகன் போட்டி, கே.கே.நகரில் நடந்தது.இதில், 55, 60, 65, 70, 75, 80 மற்றும் 80 பிளஸ் உள்ளிட்ட எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தவிர, ஜூனியர் மற்றும் மாஸ்டர் பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தன.சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மொத்தம் 148 வீரர்கள் பங்கேற்று, கட்டுடலை காட்டி
 'மிஸ்டர் சென்னை' ஆணழகன்: வடபழநி வீரர் சாம்பியன்



சென்னை :தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், 'மிஸ்டர் சென்னை - 2022'க்கான ஆணழகன் போட்டி, கே.கே.நகரில் நடந்தது.

இதில், 55, 60, 65, 70, 75, 80 மற்றும் 80 பிளஸ் உள்ளிட்ட எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தவிர, ஜூனியர் மற்றும் மாஸ்டர் பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தன.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மொத்தம் 148 வீரர்கள் பங்கேற்று, கட்டுடலை காட்டி அசத்தினர்.

போட்டிகள் முடிவில், வடபழநியைச் சேர்ந்த தீனதயாளன் முதலிடத்தை பிடித்து, 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன், 'சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றார்.

கொளத்துாரைச் சேர்ந்த இளவரசன், ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், முறையே இரண்டு, மூன்றாம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு பிரிவுகளிலும் தனித்தனியாக சாம்பியன் பட்டமும், பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில சங்கத்தின் பொது செயலர் கோல்டு பிரகாஷ் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X