பேருந்து மோதி ஓட்டுனர் இறப்பு மனைவிக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை :சென்னை, சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்ட்வின், 33; ஆட்டோ ஓட்டுனர். இவர், 2020 செப்., 9ல், வாலாஜாபாத்தில் இருந்து வண்டலுார் சாலை நோக்கி, ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.கரசங்கால் அருகே, அதே வழித்தடத்தில் வந்த தனியார் சொகுசு பஸ், திடீரென வலதுபுறம் திரும்பியது. இதில், பஸ் மீது ஆட்டோ மோதியது. படுகாயம் அடைந்த கிறிஸ்ட்வின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தன் கணவரின்

சென்னை :சென்னை, சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்ட்வின், 33; ஆட்டோ ஓட்டுனர். இவர், 2020 செப்., 9ல், வாலாஜாபாத்தில் இருந்து வண்டலுார் சாலை நோக்கி, ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

கரசங்கால் அருகே, அதே வழித்தடத்தில் வந்த தனியார் சொகுசு பஸ், திடீரென வலதுபுறம் திரும்பியது. இதில், பஸ் மீது ஆட்டோ மோதியது. படுகாயம் அடைந்த கிறிஸ்ட்வின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தன் கணவரின் இறப்புக்கு, 3.50 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கிறிஸ்ட்வின் மனைவி கிறிஸ்டலாஷிலா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.சந்திரசேகரன் முன் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பஸ் டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம். இறந்தவர், நான்கு ஆட்டோவை வாடகை விட்டு, அதன் வாயிலாக வருவாய் ஈட்டி வந்துள்ளார். அவர் இறப்புக்கு பின், நிதி நிறுவனம் அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளது.

எனவே, மனுதாரருக்கு 42.22 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், சோழமண்டலம் எம்.எஸ்., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X