வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசி நாடகமாடிய ஹிந்து முன்னணி பிரமுகர் கைது

Added : நவ 21, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், ஹிந்து முன்னணி பிரமுகர் ஒருவர், தன் வீட்டின் முன், தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசிவிட்டு, மர்ம நபர்கள் வீசியதாக நாடகமாடியது, போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 40; ஹிந்து முன்னணி மாநகர செயலர். இவரது மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது, வீட்டு
 வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசி நாடகமாடிய ஹிந்து முன்னணி பிரமுகர் கைது

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், ஹிந்து முன்னணி பிரமுகர் ஒருவர், தன் வீட்டின் முன், தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசிவிட்டு, மர்ம நபர்கள் வீசியதாக நாடகமாடியது, போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 40; ஹிந்து முன்னணி மாநகர செயலர். இவரது மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது, வீட்டு வாசலில் மண்ணெண்ணெயுடன், கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது. இது குறித்து, கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு சக்கரபாணி தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம், மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை வீட்டின் முன் வீசிச் சென்றதாக கூறினார்.

தஞ்சாவூர் எஸ்.பி., ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

தஞ்சாவூரில் இருந்து மோப்ப நாய் டாபி வரவழைக்கப்பட்டு துப்பறியப்பட்டது. அந்த நாய் சிறிது துாரம் மட்டுமே ஓடியது. மேலும், அங்கு உடைந்து கிடந்த பாட்டிலை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் கைரேகைகளை எடுத்து சோதனை நடத்தினர்.

பின்னர், சக்கரபாணியை கும்பகோணம் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறாமல், ஒரே இடத்தில் கிடந்தது.

பாட்டிலில் எரிந்த திரியின் துணி, சக்கரபாணி வீட்டில் இருந்த போர்வையில் கிழிக்கப்பட்டது தெரிய வந்தது. சக்கரபாணியிடமும், அவரது மனைவியிடமும் போலீசார் தனித்தனியாக விசாரித்த போது, இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர்.

விளம்பரத்துக்காகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என்பதாலும், நாடகத்தை அரங்கேற்றம் செய்ததாக, சக்கரபாணி ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக, மேலக்காவிரி வி.ஏ.ஓ., திருஞானசம்மந்தம் அளித்த புகார்படி, சக்கரபாணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X