'ரெடிமேட் கான்கிரீட்' வடிகால் திருவொற்றியூரில் பணி தீவிரம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
திருவொற்றியூர், :திருவொற்றியூர் மண்டலத்தில், பருவமழையின் போது, 4, 6, 7 உள்ளிட்ட வார்டுகளில், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.அதன்படி, கொசஸ்தலை வடிநில திட்ட பகுதியின் கீழ், 3,220 கோடி ரூபாய் நிலையில், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்துார் உள்ளிட்ட மண்டலங்களில், ராட்சத மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி ஓராண்டாக நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூரிலும்,
 'ரெடிமேட் கான்கிரீட்' வடிகால் திருவொற்றியூரில் பணி தீவிரம்

திருவொற்றியூர், :திருவொற்றியூர் மண்டலத்தில், பருவமழையின் போது, 4, 6, 7 உள்ளிட்ட வார்டுகளில், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

அதன்படி, கொசஸ்தலை வடிநில திட்ட பகுதியின் கீழ், 3,220 கோடி ரூபாய் நிலையில், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்துார் உள்ளிட்ட மண்டலங்களில், ராட்சத மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி ஓராண்டாக நடக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூரிலும், குறிப்பாக 4, 6, 7 ஆகிய வார்டுகளில், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடக்கிறது.

சாலையோரங்களில், கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு, வடிகால்கள் கட்டமைக்கப்படுகின்றன.

சாலையை கடக்கும் வகையில், பாதாள வழிகளுக்கு, 'பிரிகாஸ்ட்' முறையில் சதுர வடிவ குழாய் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 'ரெடிமேட் கான்கிரீட்' குழாய்களை வரிசையாக பொருத்தும் பணி, தற்போது தீவிரமாக நடக்கிறது.

அதன்படி, திருவொற்றியூர், ஜோதி நகர் சந்திப்பு, மணலி விரைவு சாலையை கடக்கும் வகையில், 3 மீட்டர் துாரத்திற்கு பாதாள வழி வடிகாலுக்கு, ரெடிமேட் கான்கிரீட் குழாய்கள் பொருத்தும் பணி, நேற்று காலை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, அச்சாலையில் ஒரு வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மற்றொரு வழியில் இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தி, இருவழித்தடமாக மாற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

இரவில், மற்றொரு புறம், ரெடிமேட் கான்கிரீட் வடிகால்கள் அமைக்கும் பணி முடிவுறும் என, தெரிகிறது. இப்பணிகளை, மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் சங்கரன், செயற்பொறியாளர் பால்தங்க துரை உள்ளிட்டோர் பார்வையிட்டு, பணிகளை முடுக்கி விட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X