உலக கால்பந்து போட்டி எதிரொலி: கத்தாருக்கு 1.50 கோடி முட்டை

Added : நவ 21, 2022 | |
Advertisement
நாமக்கல் : கத்தாரில் உலக கால்பந்து போட்டி நடந்து வருவதால், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை, 1.50 கோடியாக அதிகரித்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில், தினந்தோறும், 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டியால்,
 உலக கால்பந்து போட்டி எதிரொலி: கத்தாருக்கு 1.50 கோடி முட்டை

நாமக்கல் : கத்தாரில் உலக கால்பந்து போட்டி நடந்து வருவதால், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை, 1.50 கோடியாக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில், தினந்தோறும், 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது, கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டியால், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு, முட்டை ஏற்றுமதி, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள் வர்த்தக சங்க பொதுச்செயலர் டாக்டர் செந்தில் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.

கத்தாருக்கு மட்டும், 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால்பந்து போட்டி காரணமாக, 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ரஷ்யா போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கோழி தீவனம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால், துருக்கி போன்ற நாடுகள் முட்டை விலையை உயர்த்திஉள்ளன.

துருக்கியில், 360 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை, 18 முதல், 20 டாலர்கள் வரை இருக்கும். கடந்த மாதம், 36 டாலர்களாக உயர்ந்துள்ளது.

நாமக்கல் முட்டை விலை குறைவால், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற நாடுகள், நாமக்கல்லில் இருந்து அதிகளவில் முட்டைகளை வாங்கத் துவங்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X