குடியாத்தத்தில், வேலுார் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் கடன், மானியம் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து, 97 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.இது தொடர்பாக, கிளை மேலாளர் உமா மகேஸ்வரியை, மாவட்ட வணிக குற்றப்பிரிவு போலீசார், கடந்தாண்டு கைது செய்தனர். அவர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.வணிக குற்றப்பிரிவு போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த வங்கியில் பணியாற்றிய மற்றொரு மேலாளர் ஜெயகுமார், 50, உதவி மேலாளர் அம்பிகா, 48, ஆகியோரும் மோசடிக்கு உடந்தை என தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரையும், 'டிஸ்மிஸ்' செய்து, வேலுார் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் விஜயபானு நேற்று உத்தரவிட்டார்.