நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கல் அமோகம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
சென்னை, :திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம், புள்ளிலைன், சென்றம்பாக்கம், தீர்த்தகரையம்பட்டு ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதியில் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இப்பகுதிகளில், ஏராளமான ஏரிகள், கால்வாய்கள், நீர்நிலை புறம்போக்கு நிலங்கள்



சென்னை, :திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம், புள்ளிலைன், சென்றம்பாக்கம், தீர்த்தகரையம்பட்டு ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதியில் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

இப்பகுதிகளில், ஏராளமான ஏரிகள், கால்வாய்கள், நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இதில் ஏராளமான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பிளாட்கள் போடப்பட்டுள்ளன. அவற்றில் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

இதனால், மழை நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, சட்டசபை தேர்தல் நேரத்தில் உறுதியளிக்கப்பட்டது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறைக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நீர்நிலைகளில் புதிதாக உருவாகி வரும் குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு கேட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் கேட்கும்போது, 'ஆன்லைன் வாயிலாக மின் இணைப்பு கேட்பதால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

மின் இணைப்பு வழங்குவது எங்கள் பணி' என, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் கூறி வருகின்றனர்.

மின் வாரியத்தின் நடவடிக்கையால், நீர்வளத்துறையினருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் முறையிட நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X